“ஏன் சுந்தரம் டாக்டர் இப்படி கேவலமா யோசிக்கறாரு”
“அவனோட புத்தியே அவ்ளோதான், சின்னப்ப இருந்து மாறல” என சொல்ல கீர்த்தனா ஒரு விசயத்தை நோட் செய்தாள்
”பாட்டி எனக்கு நீங்க பேசறப்ப ஒரு விசயம் உறுத்தலாவே இருக்கு கேட்கவா”
“கேளு”
“வைத்தி தாத்தாவை அவர் இவர்ன்னு சொல்றீங்க ஆனா சுந்தரம் டாக்டரை சுந்தரம் அவன் இவன்னு சொல்றீங்க ஏன்”
“எனக்கு சுந்தரத்தை இப்படி கூப்பிட்டு பேசியே பழகிடுச்சி. பிடிக்காம என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட கோபம், அதனால நான் அவரை மதிக்கலை. அவருக்குத் தேவை என்ன வைத்தியை பழிவாங்கனும், அவனை விட உசரத்துக்கு போகனும், படிப்பிலயும் சரி, கல்யாண வாழ்க்கையிலயும் சரி வைத்தியை விட அதிகமா இருக்கனும்னுதான் டாக்டருக்கு படிச்சாரு. அப்ப இந்த ஊர்ல நான்தான் அழகா இருந்தேன். எங்க என்னை வைத்தி கல்யாணம் பண்ணிக்குமோன்னு கட்டாயமா கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. 3 புள்ளைகளும் அந்த கடவுள் பிரசாதம்” என அவர் சொல்லி பெருமூச்சு விட்டார்.
”பாவம் வைத்தி தாத்தா”
“நானும் பாவம்தான்”
”ஆமாம் நீங்களும் பாவம்தான் ஆனா பாட்டி இப்பவரைக்குமா அவர் உங்களையே நினைச்சிட்டு இருப்பாரு. கொள்ளு பேரன் எடுக்கற வயசு வந்தாச்சி அவருக்கு”
“இருக்கட்டுமே என்ன ஆனாலும் இந்த விட்டுக்கு நான் குடி வந்ததிலிருந்து தினமும் என்னை பார்ப்பாரு, பேசமாட்டாரு பேசி என்ன பிரயோசனம்னு அவர் பேசவே மாட்டாரு. நானும்தான் கல்யாணம் ஆச்சி 3 புள்ளைங்க இருக்காங்க, இதுக்கு மேல என்னத்த