விட ஒரு படி மேல இருக்கனும்னு பேராசை, அதான் டாக்டருக்கு படிச்சி வந்து என்னை கட்டாயமா கட்டிக்கிட்டாரு. ரெண்டு பேருமே என்னை காதலிச்சாங்க ஆனா நான் யாரை காதலிக்கிறேங்கறதுதானே முக்கியம்”
“அப்ப நீங்க இப்ப வரைக்கும் வைத்தி தாத்தாவைதான் நினைக்கறீங்களா”
“ஆமாம்”
“அப்ப சுந்தரம்”
“கல்யாணம் ஆச்சி. குழந்தைங்க பொறந்துச்சி. அப்ப எனக்குத் தைரியம் இல்லை, அப்பா அம்மாவை சாகடிச்சிட்டு வாழனுமான்னு விட்டேன்.”
“ஆனா வைத்தி தாத்தாக்கும் கல்யாணம் ஆகியிருக்கே”
“ஆமாம் எனக்கு கல்யாணம் ஆகி குழந்தை பொறந்த பின்னாடி வேணும்னே இங்க குடி வந்தது, அவர் முன்னாடியே என் கூட சுந்தரம் பழகினது, அதனால வைத்தி மனசு உடைஞ்சி போனதை பார்த்த அவரோட அப்பா அவருக்கு வெளியூர் பொண்ணை கட்டாயமா கட்டி வைச்சாரு. அவர் மறுத்தாரு, கேட்கலை பொண்ணுக்கும் என்னை பத்தி தெரியும், தெரிஞ்சே கட்டிக்கிச்சி. எனக்கும் அவளுக்கும் பெரிசா பகை கிடையாது. ஆனா வைத்திக்கும் சுந்தரத்துக்கும் பகை இருந்திச்சி. அவர் ஒண்ணு செய்ய, அதுக்கு போட்டியா இவர் ஒண்ணு செய்யன்னு சண்டைதான்.
இவர் டாக்டருங்கறதால ஊருக்குள்ள நல்ல மதிப்பு அதனால இவர் புகழ் ஓங்கிச்சி. என்னதான் இருந்தாலும் வைத்தி விவசாயம் செய்றவன்தானேன்னு குறைச்சிப் பேசினாங்க. டாக்டர் பொண்டாட்டின்னு என்னை கூப்பிட கூப்பிட வைத்தியும் சொந்தமா நாட்டு மருந்தை வீட்லயே மக்களுக்கு இலவசமா கொடுக்க ஆரம்பிச்சாரு.
அது சுந்தரத்துக்கு பிடிக்காம பெரிய பிரச்சனை கலாட்டான்னு போனான். பஞ்சாயத்து போலீஸ் வரைக்கும் போயிடுச்சி. கடைசியில எனக்காக வைத்தி விட்டுட்டாரு. இல்லைன்னா சுந்தரம் என்னிக்கோ ஒண்ணு கை கால் வெட்டப்பட்டு முடமாயிருப்பாரு