(Reading time: 39 - 78 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

கேட்க அதற்கு அவர் கண்கள் கலங்கியது

   

”பாட்டி பாட்டி என்னாச்சி ஏன் அழறீங்க பாட்டி” என அவள் கவலையுடன் அவரது தோளைத் தடவிவிட

   

”ஒண்ணுமில்லை எல்லாம் என் நேரம் விதி விளையாடியிருந்தா கூட பரவாயில்லைன்னு போயிருப்பேன். ஒருத்தனோட சதியாலதான் இம்புட்டு ஆச்சி”

   

“என்னாச்சி பாட்டி”

   

“அந்த சுந்தரம் இருக்கான்ல”

   

“ஆமாம் தாத்தாவோட நண்பன் அவனுக்கென்ன”

   

“அவன் டாக்டர் படிப்பு படிச்சிட்டு வந்தாப்ல, அப்ப எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க நினைச்சாரு எங்கப்பா அந்த சமயம் வைத்தியும்”

   

“இருங்க இருங்க வைத்தியா ஓ நிக் நேமா சூப்பர் பாட்டி மேல சொல்லுங்க”

   

“லந்து பண்ணாதடி கேளு கதையை” என அவர் சொல்ல ஆரம்பிக்க அவளும் கேட்கலானாள்

   

”வைத்தியும் என்னை கல்யாணம் கட்டிக்க ஆசைப்பட்டு அவரோட அப்பாகிட்ட பேசினாரு. அவருக்கும் சம்மதம்தான். சரின்னு ஒரு நாள் பார்த்து என்னை பொண்ணு கேட்க வர்றதா என்கிட்ட சொன்னாரு. நானும் அந்த நாளுக்காக காத்திருந்தேன். இந்த விசயம் அரசல் புரசலா நிலத்தில வேலை செஞ்சவங்களுக்கு தெரிஞ்சி என் அப்பாவை ஓட்ட ஆரம்பிச்சாங்க. அவமானத்தில என் அப்பா என்னைத் திட்டிட்டாரு. அந்த சமயம் அந்த சுந்தரம் படிப்பு முடிச்சி நேரா வந்து என அப்பாட்ட தைரியமா நின்னு உங்க பொண்ணை நான் கட்டிக்கிறேன்னு சொன்னான்”

   

“அய்யோ இது என்ன இப்படி ஆகுது”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.