(Reading time: 39 - 78 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

சாப்பிடுவோம். அப்பா நிலத்துக்கு போனதும் என்னை தேடி ஒளிஞ்சி மறைஞ்சி வந்து பார்ப்பாரு. அப்ப நான் இன்னும் அழகா இருப்பேன். 

   

இப்பதான் வயசா போச்சி. நான் வயசுக்கு வந்தபின்னாடி எங்க ஊர்ல திருவிழா வந்துச்சி. நானும் என் அப்பா அம்மாவோட போயிருந்தேன். அவரும் வந்திருந்தாரு கூட சுந்தரமும் வந்திருந்தாப்ல, அன்னிக்கு நானும் அவரும் சேர்ந்து யாருக்கும் தெரியாம போட்டோகாரன்கிட்ட போட்டோ புடிச்சிக்கிட்டோம். 

   

இதை யாரோ என் அப்பாருக்கு சொல்ல அவ்ளோதான் அதுக்கப்புறம் என்னை வீட்டை விட்டு எங்கயும் விடலை. அதுக்கப்புறம் அவரே அடிக்கடி எப்படியாவது வந்து என்னை பார்ப்பாரு, வர்றப்ப எனக்கு தேன்மிட்டாய், கடலை உருண்டை,  ஆரஞ்சுமிட்டாய் அப்புறம் அவர் நிலத்தில விளைஞ்ச கடலைன்னு கொண்டுவந்து தருவாரு. 

   

நானும் வீட்ல இருந்தேன்ல சமைக்க கத்துக்கிட்டேன். அவர் வர்ற நேரம் எனக்குத் தெரியும் என் அம்மா இல்லாத நேரமோ இல்லை என் அம்மா எங்கிட்டாவது வெளிய இருக்கறத பார்த்துட்டு என்னைத் தேடி வருவாரு”

   

“வீட்டுக்குள்ள வருவாரா”

   

இல்லை இல்லை எங்க வீட்டுக்கு பின்னாடி கிணத்தடி இருக்கும் அங்க வருவாரு. யாராவது கேட்டா தண்ணி குடிக்க வந்தேன்னு சொல்லிப்புடுவாரு அப்படியே நாங்க பழகினோம், என்னை பார்க்கறதுக்காகவே அவர் அடிக்கடி பள்ளிக்கூடம் போகாம மட்டம் போட்டதால அவரால ஒழுங்கா படிக்க முடியலை. 

   

ஆனா என் மனசை நல்லா படிச்சாரு. எங்களுக்குள்ள அப்பதான் அது காதல்னே புரிஞ்சிது. நானும் அவரும் அப்படி காதலிச்சிக்கிட்டோம். எப்படியோ பியூசி படிச்சி முடிச்சிட்டாரு. அதுக்கப்புறம் காலேஜ்ல தான் போய் படிக்கனும். ஆனா அவரு இதே போதும்னு நிறுத்திவிட்டு நிலத்துல இறங்கிட்டாரு. அப்படியே நாட்டு மருத்துவம் அது இதுன்னு படிக்கப் போனாரு”

   

“சரி பாட்டி அவ்ளோ காதல்னா எதுக்காக அவரை நீங்க கல்யாணம் பண்ணிக்கலை” என 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.