(Reading time: 39 - 78 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

“அந்த பவியிருக்காளே அவள் என்னை விரும்பறதா தாஸ் சொல்றான்”

   

“அது எனக்குத் தெரியும் நேத்து என்கிட்ட சொன்னா”

   

”அதுக்கு நீ என்ன சொன்ன”

   

“நீ விரும்பினா போதுமா அவர் விரும்பனும்னு சொன்னேன்”

   

“அதுக்கு அவள் என்ன சொன்னா?”

   

“கண்டிப்பா விரும்புவாரு. என் அண்ணா என் ஆசைக்காக என்ன வேணும்னாலும் செய்வார்ங்கறா” என சொல்லிவிட்டு

   

”சரி சரி நான் போனை வைச்சிடறேன் பவி வர்றா” என சொல்லி போனை கட் செய்தாள் கீர்த்தானா. 

   

அவள் சொன்னதைக் கேட்டு சற்று முகம் மாறிய தேவாவிடம் என்ன ஏது என கேட்டுத் தெரிந்துக் கொண்டான் தாஸ்.

   

அந்நேரம் கோயிலுக்கு டாக்டர் கீதாவின் மகள் மித்ரா கோயில் வரை வந்து உள்ளே செல்லாமல் வெளியே நிற்பதும், யாருடனோ போனில் பேசுவதும் அடுத்த நொடி பவி கோயிலை விட்டு வெளியே வருவதும் கண்டு வியந்தான் தேவா. கூடவே விக்ரம் கீர்த்தனாவுடன் இணக்கமாக பேசிக் கொண்டு வெளியே வர கீர்த்தனா சுற்றி முற்றி தேவாவின் காரைத் தேடி கண்டுபிடித்த அடுத்த நிமிஷம் சிரிக்கவே அதை விக்ரம் பார்த்தான். 

   

”அண்ணா வந்திருக்காரு” என சொல்லிக் கொண்டே நேராக காரிடம் வர தேவாவோ உடனே காரை விட்டு இறங்கினான்

   

”என்ன அண்ணா இப்பதான் வந்தியா”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.