(Reading time: 39 - 78 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

   

”இன்னும் எவ்ளோ செங்கல் தேவை ஏற்கனவே 20,000 செங்கல் கொண்டாந்துச்சி. மேற்கொண்டு 12000 செங்கல் போதுமா” என பேச பேச தாஸ் பொறுமையிழந்து தேவாவிடம் கடிகாரத்தைக்காட்டி கோயில் என சைகை செய்ய தேவாவிற்கு உடனே கீர்த்தனாவின் நினைப்பு வர

   

”அட மறந்துட்டேன் தாஸ் வா போலாம்” என சொல்ல மேஸ்திரியிடம் நாளைக்கு வந்து மீதி பேசுவதாக சொல்லி விட்டு காரில் ஏறி கோயிலை நோக்கிப் பறந்தான். சரியாக கோயில் இருக்கும் இடம் வரும் போது இம்முறை கோயிலுக்குள் விக்ரம், பவி மற்றும் கீர்த்தனா நுழைவதைக் கண்டு காரை விட்டு இறங்காமல் அமைதியாக இருந்தான் தேவா

   

தாஸ் ”என்னாச்சி” என்பது போல் சைகை செய்ய

   

”பவியும் விக்ரமும் இருக்காங்க” என சொல்ல அவனும் பார்த்துவிட்டு குழம்பினான்.

   

2 நிமிடம் கழித்து தேவாவிற்கு போன் வரவே அவன் பார்த்தான். ஒய்ப் என இருக்கவே போன் ஆன் செய்தான்

   

”ஹலோ”

   

“எங்க இருக்கீங்க நான் கோயிலுக்கு வந்துட்டேன்”

   

“நான் வெளிய கார்லதான் இருக்கேன். உன்கூட பவி வந்தா சரி இந்த விக்ரம் ஏன் வந்தான்”

   

“தெரியலை வேணாம்னுதான் சொன்னேன் அடம்பிடிச்சி வந்தாரு. ஒருவேளை பவிக்காக இருக்கலாம்”

   

“உனக்காகவும் இருக்கலாமே” என சொல்ல அதற்கு அவள் கோபத்துடன்

   

”என் மேல சந்தேகப்படறீங்களா”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.