(Reading time: 40 - 80 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

   

”சாரி”

   

“உன் சாரியை தூக்கி குப்பையில போடு அப்படியே உன் வேஷத்தையும் குப்பையில போடு” என கத்தியவன் திரும்பி சுற்றியிருந்த சொந்த பந்தங்கள் முன்பு கைகூப்பி நின்று

   

”இங்க எந்த நிகழ்ச்சியும் நடக்கலை எல்லாரும் கிளம்புங்க கிளம்புங்க” என உரத்த குரலில் கத்த தாஸ் அனைவரையும் எழுப்ப ஆரம்பிக்க 10 நிமிடத்தில் வீடே காலியானது. 

   

சரண் அனைவரும் சென்றதும் தனது தாடி தொப்பியை எடுத்துவிட்டு சரண்யாவாக நிற்கவும் தேவாவின் தாத்தா முதல் கடைக்குட்டி சுப்ரஜா வரை அதிர்ந்து நின்றார்கள்.

   

அதில் கைலாசநாதன் சரண்யாவிடம் வந்து

   

”என்னம்மா இது வேஷம் இல்லை இல்ல நீ வேணும்னே உன் அண்ணனை போல வேஷம் போட்டு வந்திருக்க, அப்ப உன அண்ணன் எங்க” என கேட்க அவளோ பதில் சொல்ல முடியாமல் தவிக்க தேவாவோ

   

”அப்பா இவள் பொய் சொல்றாப்பா, இவளுக்கு அண்ணன்னு யாரும் இல்லை உங்க நண்பனுக்கு ஒரே பொண்ணுதான் வேணா போன் பண்ணிக் கேட்டுப்பாருங்க” என சொல்ல அவரும் அவசரமாக சரண்யாவின் தந்தைக்கு போன் செய்து விவரம் கேட்டார்

   

”ஹலோ பூபதி உனக்கு பொண்ணு பையன் ரெண்டு பேரும் இருக்காங்களா ட்வின்சா” என கேட்க அவரோ

   

”எனக்கு ஒரே ஒரு பொண்ணுதான்” என சொல்ல அதிர்ந்தார் கைலாசம்

   

”என்ன பூபதி இது இப்படி சொல்ற அப்ப உன் பையன் அந்த ஹாஸ்டல் டீலிங்காக வந்தானே அவன் யாரு”

   

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.