போதுமா” என கத்த தாத்தாவே வந்தார்
அவர் வரவும் அவரிடம் சென்ற சரண்யா
”சாரி தாத்தா நான் இவ்ளோ தூரம் ஆகும்னு நினைக்கலை”
“இதுக்குத்தான் இந்த வேஷம் போடறது வேணாம்னு சொன்னேன் கேட்டியா, இப்ப பாரு அவனவன் நீ பொண்ணா, பையனா, திருநங்கையா அப்படி இப்படின்னு கேள்விக் கேட்கறாங்க, உன் வாழ்க்கையில நீயே மண் அள்ளி போட்டுட்டியேம்மா”
“இதுக்கு காரணம் நான்தான் ஒத்துக்கறேன் ஆனா, என் வேஷத்தை தப்பான இடத்தில கலைச்சி இவ்ளோ பிரச்சனையை செஞ்சது அந்த தேவாதான்” என சொல்ல கைலாசத்திற்கு கோபம் வந்தது
”என்னம்மா இது நானும் பார்க்கறேன் இதையே சொல்ற தேவா மட்டும் உண்மையை சொல்லலைன்னா இன்னும் நீ எங்களை ஏமாத்திட்டே இருந்திருப்ப”
“நான் ஒத்துக்கறேன் அவர் என்னைப்பத்தி எல்லாரும் போனபின்னாடி பேசி முடிச்சிருக்கனும், எல்லாரும் இருக்கறப்ப சொன்னதாலதானே இப்ப என் வீட்டு மானம் போச்சி”
“ஓ அப்படியாம்மா ஆமாம்மா உன்னை பொறுத்தவரைக்கும் நீ பண்ணது தப்பே இல்லை, என் பையன்தான் அவசரப்பட்டு உண்மையை உளறிட்டான். இதப்பாரு அவன் தனியாவே உண்மையை சொல்லியிருந்தாலும் காத்துக்கு கூட காது இருக்கும்மா, அதுவழியா உன் நாடகம் வெளிய போயிருக்கும், அப்ப என்ன செய்வ அப்பவும் நீ மதுரைக்கு வந்ததாலதான் இவ்ளோ நடந்துச்சின்னு எங்க மேல பழி போடுவியா ஆக மொத்தம் நல்லா வளர்த்திருக்காங்க உன்னை
சே உன்னை நம்பி நான் கேவலம் அந்த ஹாஸ்டல் விசயத்தில பேராசைப்பட்டு இன்னிக்கு என் பையனையும் இழந்தேன், என் அப்பாவோட நம்பிக்கையையும் இழந்தேன், ஊர்லயும் என் வீட்டு மானம் போச்சி. இனிமே எங்களை நம்பி யாரும் வேலை தரமாட்டாங்க, உன்
Next episode pls