“எதுவும் தெரியலை ஒரே குழப்பமா இருக்கு”
“வேலைக்கு போறியா இல்லையா”
“இல்லை போகலை”
“உன் தங்கச்சி என்ன சொல்றா”
“அவளுக்கும் கஷ்டம்தான் ஆனா என்னை விட அதிகமா இல்லை ஓரளவுக்கு மாறி வந்துட்டா”
“நல்லது இப்ப உனக்கு கீர்த்தனாதான் வேணுமா”
“ஆமாம் சார் அவள்தான் என் உயிர், அவள் எனக்கு கிடைக்கலைன்னா நான் செத்துடுவேன்”
“அப்படியா சரி ஆனா அவளுக்காக நீ எதுவும் செய்யலையே”
“செய்றதுக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கலை சார் அதான்”
“அன்னிக்கு பெரிசா சவால் விட்டுப் போன, நான் பெரியாளாகி காட்டறேன், அந்த தேவா பிச்சை எடுப்பான் அப்படி இப்படின்னு அதெல்லாம் பொய்யா”
“இல்லை சார் அப்படி நடக்கனும்னுதான் ஆசைப்படறேன் ஆனா, எப்படி என்ன செய்றதுன்னு புரியலை”
“சரி சரி உன்னோட எண்ணம் நிறைவேற நான் உனக்கு உதவி செய்றேன்”
“நன்றி சார் என்ன செய்யனும்னு சொல்லுங்க சார் செய்றேன்”
Next episode pls