(Reading time: 40 - 80 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

ஏர்போர்ட்ல விட்டுட்டு வந்தா பையன் மாதிரி வேஷம் போட்டு திரும்பவும் என் வீட்டுக்கே வந்து எல்லாரையும் ஏமாத்திட்டா. 

   

ஒரு வார்த்தை நான் பையன் இல்லை பொண்ணுன்னு சொல்லியிருந்தா நிச்சயமா இப்படி ஊரை கூட்டி நான் பொண்ணு பார்க்கற நிகழ்ச்சியை வைச்சிருக்க மாட்டேன். சரி என் பையன்தான் உன் பொண்ணை ஏத்துக்கலை. அதனால நம்ம உறவுக்குள்ள விரிசல் வரக்கூடாதுன்னு நினைச்சேன். அதுகாக இப்படி ஒரு வழி செய்யலாம்னு முடிவு பண்ணேன் ஆனா கடைசியில இப்படி ஏமாந்துட்டேன். இப்படியா வளர்த்து வைப்ப” என அவர் கேட்க மறுபக்கம் பதிலே இல்லை. உடனே அந்த பக்கம் வேறொரு குரல் கேட்டது

   

”நான் சரண்யாவோட தாத்தா ராஜமாணிக்கம் பேசறேன்” என கம்பீரமாகப் பேச உடனே கைலாசமும்

   

”சொல்லுங்க” என்றார் பணிவுடன்

   

”என் பேத்திகிட்ட போன் கொடுங்க” என சொல்ல அவரும் அவளிடம் தந்துவிட்டு அவளை முறைத்துவிட்டு தன் மகனிடம் சென்று நின்றுக் கொண்டு அவனிடம் சரண் மற்றும் சரண்யாவை பற்றின விவரங்கள் கேட்க அவனும் சொல்லலானான். அதை மற்றவர்களும் கேட்க கேட்க அவர்களுக்கு கோபமே வந்தது.

   

சரண்யாவோ தன் தாத்தாவிடம்

   

”தாத்தா”

   

“நான் அன்னிக்கே சொன்னேன் விளையாட்டு வேணாம்னு கேட்டியா, இப்ப பாரு என்னாச்சின்னு” என கத்த

   

”இல்லை தாத்தா நான் எப்பவும் போலதான் இப்படி வேஷம் போட்டேன். ஆனா இங்க இவங்க இப்படி செய்வாங்கன்னு”

   

“அவங்க கேட்டப்ப நீ ஏன் உண்மையை சொல்லலை”

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.