(Reading time: 40 - 80 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

   

“உண்மையை சொன்னா தேவா கிடைக்கமாட்டார்ன்னு”

   

“போதும் அவன்தான் உன்னை விரும்பலையே அப்புறம் அவனையே ஏன் நினைக்கற, கிளம்பி வா, போதும் நீ அங்கிருந்து செஞ்சது அந்த டீலிங்கும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம், அக்ரிமெண்ட்டை நான் கேன்சல் பண்ணிடறேன் இனிமே உனக்கும் அந்த குடும்பத்துக்கும் எந்தவொரு சம்பந்தமும் கிடையாது”

   

“தாத்தா ஆனா நான் வந்து”

   

“போதும் என் பேச்சை நீ என்னிக்குமே கேட்டதில்லை. பொண்ணாச்சேன்னு தனியா பாரின்ல தங்கி படிக்கனுமேன்னு நீ வெளிய போறப்ப பையனா வேஷம் போட்டுக்க சேப்டியா இருப்பேன்னு சொன்னா அதை இப்ப மதுரையில செய்றியா நீ, உன்னை நான் அனுப்பினப்ப என்ன சொன்னேன் சின்னதா நீ தப்பு செஞ்சாலும் அங்க அது பெரிய பிரச்சனையாயிடும்னு சொன்னேன். கேட்டியா இப்ப பாரு என்னாச்சி, உனக்கு ஒண்ணும் இல்லை அவங்களுக்குத்தான் இழப்பு அதிகம், மானம் போச்சி கூட இந்த ஹாஸ்டல் டீலிங்கும் போச்சி சந்தோஷமா இப்ப உனக்கு” என கத்த அவளோ கண்கள் கலங்க

   

“தாத்தா இப்படி ஆகும்னு நான் நினைக்கலை”

   

“போதும் இதுக்கு மேல நீ பேச வேணாம் கிளம்பு வா வா” 

   

”தாத்தா நான் வந்துடறேன் ஆனா எதுக்காக டீலிங் கேன்சல் செய்யனும்”

   

“நான் சொல்றதை செய் கிளம்பி வா” என போனை கட் செய்யவும் அந்த போனை கைலாசத்திடம் கொடுக்க அவர் உடனே

   

”உனக்கும் எங்களுக்கும் இருக்கற டீலிங் முடிஞ்சிடுச்சி. நாங்களே கேன்சல் பண்ணிடறோம். நாங்க நல்லவங்க எங்ககிட்டயே நீ வேஷம் போட்டு ஏமாத்தறியா, இனிமே உன்னை யாரும் நம்ப மாட்டாங்க. நீ பாதி வேலையில கூட அப்படியே விட்டுட்டு போயிடுவ 

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.