(Reading time: 25 - 50 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

அறையை விட்டு வெளியே வந்த பெண்களும் ஒன்றன் பின் ஒன்றாக நேராக கிச்சனுக்குள் சென்றனர். ஆனால் கிச்சனுக்குள் சென்றவர்கள் சிலையென அங்கேயே நின்றுவிட்டார்கள். அவர்களின் கண்கள் எதிரில் இருப்பதை நம்ப மறுத்தன. அவர்கள் பயந்து தாத்தாவிடம் வந்தார்கள். அவர்களுக்காகவே காத்திருந்ததை போல தாத்தாவும் 

   

”வாங்கம்மா என்னாச்சி” என கேட்க சோனா

   

”தாத்தா கிச்சன்ல எந்த பொருளும் இல்லை”

   

“ஆமாம் தாத்தா நேத்து கூட எல்லாமே இருந்திச்சி இப்ப என்னடான்னா தொடைச்சி வைச்ச மாதிரி சுத்தமா இருக்கே தாத்தா” என்றாள் வந்தனா

   

”ஏன் தாத்தா ஒருவேளை திருடன் கிருடன் வந்துட்டானா” என்றாள் மிருதுளா

   

”இதுவும் இன்னிக்கு நடக்கப்போற போட்டிகள்ல ஒண்ணா தாத்தா” என்றாள் நந்தினி

   

”ஆமாம்மா இதுவும் இன்னிக்கான போட்டிதான். உட்காருங்க சொல்றேன்” என சொல்ல அவர்களும் அமைதியாக அமர்ந்தார்கள். வீட்டில் இருந்த அனைவரும் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.

   

தாத்தா ரிஷியைப்பார்த்து

   

”ரிஷி நம்ம வீட்ல 4 வேலைக்காரங்களை கூப்பிடு” என சொல்ல அவனும் அழைத்தான். 4 பேரும் வந்தவுடன் தாத்தா அவர்களைப்பார்த்து

   

”நீங்க 4 பேரும் இந்த 4 பொண்ணுங்களோட வெளிய போகப்போறீங்க அவங்களை பத்திரமா கூட்டிட்டு போயிட்டு கூட்டிட்டு வரனும் அவங்க எந்த கடைகளுக்கு போறாங்களோ அங்கயே போங்க பில்கள் கட்டாயம் கொண்டு வந்து எனக்கு தரனும் புரியுதா” என சொல்ல அவர்களும் தலையாட்டினார்கள்.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.