(Reading time: 25 - 50 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

   

”ரிஷி அந்த 4 பொண்ணுங்களுக்கும் ஆளுக்கு 1000 ரூபாய் கொடுத்துடு அப்புறம் வேலைக்காரங்க கிட்டயும் பணத்தை கொடுத்துடு. 4 பேருக்கும் 4 கார்களை ஏற்பாடு பண்ணி வேலைக்காரங்களோட அனுப்பி வை.” என சொல்லிவிட்டு அந்த 4 பெண்களையும் பார்த்தார்

   

”சரிம்மா கிளம்புங்க நேரத்தோட பொருட்கள் வாங்கிட்டு வந்து டிபன் பண்ணுங்க”

   

“நாங்க வாங்கி வர லேட்டானா எப்படி டிபன் செய்து தாத்தா”

   

“அது உங்க பிரச்சனை இப்ப மணி 8.30 ஆகுது. 9 மணிக்கெல்லாம் எல்லா கடையும் தொறந்துடுவாங்க. டிபன்தானே 10 மணிக்கு மேல செஞ்சா கூட போதும் ஆனா நீங்க வெளிய போய் உள்ள வர்ற நேரம் ஒரு மணி நேரம்தான் நான் கொடுப்பேன் இந்த 1 மணி நேரத்துக்குள்ள நீங்க வாங்க வேண்டியதை வாங்கிட்டு வந்துடுங்க கிளம்புங்க” என சொல்லவும் 4 பெண்களும் ரிஷியிடம் பணத்தை வாங்கிக்கொண்டார்கள்.

   

 அந்த 4 வேலையாட்களும் அந்த 4 பெண்களிடம் வந்து நின்றுக்கொள்ள அவர்கள் 8 பேரும் வீட்டை விட்டு வெளியே சென்றார்கள். அவர்களுக்காக தயாராக 4 கார்கள் நிற்கவே ஆளுக்கு ஒரு வண்டியில் ஏறிக்கொண்டார்கள். வண்டியும் வீட்டை தாண்டி வெளியே சென்றது. 4 கார்களும் வெவ்வேறு திக்குகளில் பயணப்பட்டது.

  

Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.

    

தொடரும்.

Go to Thooral pola kathal theenda story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.