(Reading time: 25 - 50 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

அடுத்து தாத்தா அந்த 4 பெண்களிடமும்

   

”இதுவும் ஒரு போட்டிதான்மா நான் தான் கிச்சன்ல இருந்த எல்லா பொருளையும் ஸ்டோர் ரூம்ல வைக்க சொன்னேன். இப்ப நீங்க செய்ய வேண்டியது ஒண்ணுதான். இப்பவே நீங்க கிளம்பி கடைகளுக்கு போறீங்க. இன்னிக்கு ஒரு நாள் அதாவது டிபன் மதியம் லன்ச் நைட் டின்னர் இந்த மூணு வேளைக்கும் தேவையான அரிசி பருப்பு மளிகை சாமான்கள்னு தேவையானதை வாங்கிட்டு வர்றீங்க அதுவும் வெறும் 1000 ரூபாய்ல வாங்கிட்டு வர்றீங்க இன்னிக்கு ஒரு நாள் வாங்கிட்டு வாங்க அது போதும் நாளைக்கு மறுபடியும் எல்லா பொருளையும் நான் கிச்சன்ல அடுக்கிவைச்சிடுவேன்” என சொல்ல மிருதுளாவிற்கு புரியாமல்

   

”தாத்தா நீங்க சொல்றது எனக்கு புரியலை பொருட்கள் வீட்ல இருக்கறப்ப எதுக்காக புதுசா நாங்க போய் கடையில வாங்கனும்”

   

“இருக்கு ஆனா இது இன்னிக்கு போட்டி உங்களோட புத்திசாலித்தனத்துக்கான போட்டி இதுல நீங்க எப்படி விளையாடி ஜெயிக்கறீங்கன்னு தெரிஞ்சிக்கலாம்னுதான் நான் தர்ற 1000 ரூபாய் பணத்தை நீங்க எப்படி செலவு செய்றீங்கன்னு தெரிஞ்சிக்கத்தான் போட்டி வைச்சிருக்கேன்.  நீங்க இன்னிக்கு என்ன சமைக்கப்போறீங்களோ அதுக்கு தேவையான பொருட்கள் அதாவது அரிசியாகட்டும் மளிகை பொருட்களாகட்டும் அதை நான் கொடுக்கற 1000 ரூபாய்க்குள்ள வாங்கனும் கொஞ்ச கொஞ்சமா வாங்கினா போதும் அதிகமா வாங்கனும்னு அவசியமில்லை. 3 வேளைக்கு அதுவும் நீங்க செய்ற டிஷ்ஷூக்கு ஏத்த மாதிரி வாங்குங்க போதும். பார்க்கலாம் இந்த 1000 ரூபாய்க்குள்ள வாங்க முடிஞ்சதா வாங்கிட்டு வந்து சமையல் செய்ங்க.”

   

“ஒரு வேளை அதுக்கு மேல பணமானா என்ன செய்றது தாத்தா” என்றாள் சோனா

   

“அதான் உங்க நாலு பேருக்கும் நாலு வேலைக்காரங்களை வைச்சிருக்கேனே அவங்ககிட்ட அதிகப்படியான பணத்தையும் கொடுக்கிறேன். அவங்க கிட்ட வாங்கிக்குங்க இருந்தாலும் சரி 1000 ரூபாய்க்குள்ள தான் நீங்க செலவு செய்யனும் முடியாத பட்சத்தில நீங்க அவங்க கிட்ட பணத்தை வாங்கி செலவு செய்யலாம் ஆனா அதுக்கான சரியான காரணத்தையும் பில்களையும் எனக்கு நீங்க தரனும் சரியா இப்ப கிளம்புங்க” என சொல்லியவர் ரிஷியை பார்த்தார்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.