(Reading time: 25 - 50 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

”நீ வரமாட்டியோன்னு நினைச்சி நான் பயந்துட்டேன்”

   

”எதுக்கு பயம்”

   

“ஆமா உன்னை கவனிக்க இங்க நிறைய பேர் இருக்காங்களே”

   

“அண்ணாவை சொல்றீங்களா”

   

“அவனை மட்டும் இல்ல தாத்தாவும் சரி அந்த வந்தனாவும் சரி உன்னை ரொம்பவே கவனிக்கறாங்க மத்தவங்களை விடு அவங்களுக்கு நம்மளை பத்தி தெரியும் ஆனா வந்தனா இருக்காளே அவள் மோசமானவள். நம்ம விசயம் தெரிஞ்சா போதும் பிரச்சனைதான்” 

   

”என்ன செய்வா வெளிய சொல்லிடுவாள்னு நினைக்கிறீங்களா”

   

“அவளா சத்தியமா சொல்லமாட்டா அப்படி சொன்னா எனக்குதான் லாபம் நான் ஆமாம்னு சொல்லிட்டு உன்னை கல்யாணம் செஞ்சிக்குவேன் ஆனா அவள் சொல்லமாட்டா”

   

“அப்புறம் என்ன விடுங்க”

   

“அப்படி நினைக்காத வந்தனா நம்ம விசயம் தெரிஞ்சா போதும் அதை தனக்கேத்த மாதிரி மாத்திக்குவா அது எப்படின்னு எனக்கு தெரியலைன்னாலும் ஏதோ செய்வா அது மட்டும் எனக்கு தெரியும்”

   

“ஆனா அவள் மேல ஏன் இப்படி சந்தேகப்படறீங்க. அவளும் பாவம் இந்த போட்டியில ஜெயிக்க ரொம்பவே கஷ்டப்படறா”

   

“அவள் கஷ்டப்படறாளா இல்லை தன்னை விட யாரும் மேலே போயிடக்கூடாதுன்னு நினைக்கிறாளா ஏதோ ஒண்ணு ஆனால் அவள் சரியில்லை அவள் பேச்சு நடவடிக்கை எதுவுமே சரியில்லை. அவள்ட்ட ஜாக்கிரதையா இரு அது போதும்”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.