(Reading time: 25 - 50 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

   

“நீ மறக்கலை உன் கவனம் முழுவதும் நந்தினி என்ன செய்றாள்னு பார்க்கறதில தான் இருந்திச்சி நானும் பார்த்துட்டுதான் இருந்தேன் 5 நிமிஷத்துக்கு ஒரு முறை நீ அவளையேதான் பார்த்துக்கிட்டு இருந்த இதுல காலையில எல்லாருக்கும் நீதானே காபி தருவ இன்னிக்கு நீ மறந்துட்ட ஆனா நந்தினி தான் செய்ய வேண்டிய டிபன் வேலையும் செஞ்சிட்டு காபியும் போட்டு எல்லாருக்கும் கொடுத்துட்டா. அதுதான் பொறுப்பு எவ்ளோ கஷ்டமான நேரங்கள் வந்தாலும் தன்னோட கடமையை மறக்காம இருக்கனும் புரியுதா”

   

”புரியுது தாத்தா”

   

“இன்னிக்கு நீ சரியா செய்யாததால இந்த டிபனை என்னால சாப்பிட முடியாது இதுக்காக உன்னோட மார்க் குறைக்கப்படும் நீ போகலாம்” என சொல்ல வந்தனாவிற்கு கஷ்டமாகி அவள் அங்கிருந்து சென்றுவிட்டாள்.

   

அடுத்து மிருதுளா தான் செய்த பிரட் டோஸ்ட்டிற்கு ஜாம் தடவி வைத்துவிட்டு குக்கீஸூம் வைக்க தாத்தாவிற்கு சிரிப்பே வந்தது

   

”நீ ஓவன்ல சமைச்சதானே”

   

“ஆமாம் தாத்தா”

   

“பரவாயில்லை கேஸ்ல செய்றப்ப கொஞ்சம் ருசியா இருக்கும் ஓவன்ங்கறதால பாதி ருசி வருது இருந்தாலும் இன்னிக்கு சமையல் ஓகேம்மா சட்டுன்னு ஓவன் இருக்கறதை நினைச்சி அதுக்கு ஏத்த மாதிரி நீ டிஷ் பண்ணியிருக்க புத்திசாலித்தனம் அதிகமாதான் இருக்கு நல்லது நீ போய் சாப்பிடுமா” என சொல்ல அவளும் மற்றவர்களுக்கு பரிமாறிவிட்டு சென்றுவிட்டாள்.

   

அடுத்து நந்தினி மூடிவைத்து இட்லியை வேக வைத்த காரணத்தால் புகையின் நெடியும் கருப்பும் அண்டவில்லை. அம்மியில் சட்டினி அரைத்த காரணத்தால் ருசியாகவே இருந்தது. அனைவரும் விரும்பி சாப்பிட்டனர்.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.