(Reading time: 25 - 50 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

   

வந்தனாவோ இன்று ஞாயிறு என்பதால் அனைவரையும் அசத்த எண்ணினால். சோனாவும் மிருதுளாவும் அந்த இடத்தில் இல்லாமல் போனதால் அவர்கள் தோற்றுவிட்டதாக எண்ணியவள் நந்தினி இட்லி செய்வதை பார்த்துவிட்டு அவளை விட அதிகமாக செய்ய வேண்டும் என நினைத்தவள் உருளைக்கிழங்கை அளவுக்கு அதிகமாக வேக வைத்தாள். அதில் பாதி உருளைக்கிழங்கை வைத்து மசாலா செய்து மசாலா தோசை செய்தவள் அடுத்து மீதியிருந்த உருளைக்கிழங்கை வைத்து பூரியும் செய்து  பூரி உருளைக்கிழங்கு செய்தாள். 

   

இவ்வளவும் செய்தவள் அவசரத்தில் தோசைக்கு சட்னி அரைப்பதை மறந்துவிட்டாள். அவளின் கவனம் முழுவதும் நந்தினியின் மீதே இருந்தது. வந்தனா கிராமத்து பெண் இல்லாததாலும் டவுனை சேர்ந்திருந்த பெண்ணாக இருந்தாலும் விறகடுப்பில் சமைப்பதை தன் பாட்டியிடம் கற்றுக்கொண்டதால் இன்று அவளால் சமையல் செய்ய முடிந்தது.

   

சோனா கிச்சனில் இருந்த காய்கறிகளை வைத்து சாலட் செய்தவள் பழங்களை வைத்து  சாலட் மற்றும் சில பழங்களை வைத்து ஜூஸ் போல ஆக்கி அதில் கிரீம் சாக்லேட் தூள்கள் என எல்லாம் சேர்த்து அழகாக டிபன் செய்து முடித்தாள்.

   

மிருதுளாவோ இன்று ஞாயிறு அசைவம் செய்தால் யாரும் தப்பு சொல்ல மாட்டார்கள் என் நினைத்து ஓவனில் ஈசியாக வேகும் படி பிரட் டோஸ்ட்டும் அதற்கு ஜாம், குக்கீஸ்ஸூம் செய்து வைத்துவிட்டாள்.

   

மணி 10 ஆனது

   

வீட்டில் இருந்தவர்களும் சாப்பிட அமர்ந்துக்கொள்ளவும் முதலில் சோனா தான் செய்த சாலட்களையும் ஜூஸ்களையும் வைத்தாள். அவளின் இந்த செயலால் வெகுவாக கவரப்பட்ட தாத்தா

   

”சபாஷ் சோனா சபாஷ் கேஸ் இல்லைன்னாலும் உன்னால விறகடுப்பில சமைக்க தெரியாதுன்னாலும் நந்தினியை போல வாய்ப்பு கேட்காம நீ இப்படி தெரிஞ்சத செஞ்சி அசத்தியிருக்க அதனால இன்னிக்கு உனக்கு நான் 200 மார்க் போடறேன்” என சொல்லவும் 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.