(Reading time: 25 - 50 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

   

“அது தெரியாது ஆனா கஷ்டம்ன்னு மட்டும் தெரியும். டிபனை 10 மணிக்குள்ள செய்ய சொல்லிட்டு தாத்தா போயிட்டாரு. அதுக்காக நீ இப்படியே இருக்காதே அந்த வந்தனா எல்லார் மனசுலயும் சரி தாத்தா போடற மார்க்லையும் சரி முதலிடத்தில இருக்கா இப்படியே போனா கஷ்டமாயிடும்”

   

“அய்யோ இப்ப நான் என்ன செய்றது அத்தான்”

   

“சொல்றேன் கவனமா கேளு இந்த போட்டியை போட்டியா பாரு. சோனா மிருதுளா எல்லாம் ஒரு விசயமே இல்லை அவங்களை விட்டுத்தள்ளு எனக்கு தெரிஞ்சி ரெண்டு கேசும் சீக்கிரமாவே ஒழிஞ்சிடுங்க ஆனா வந்தனா அப்படியில்லை தூக்கத்தில கூட சமையலை பத்தி பினாத்தறா ரொம்ப கெட்டிக்காரியாவும் ஏமாத்துக்காரியாவும் இருக்கா”

   

“ஏமாத்துக்காரியா”

   

“ஆமாம் நான் முத்தம் தர்றதா சொல்லவேயில்லை வேணும்னே நேத்து என்கிட்ட வந்து முத்தம் கேட்டா அது தப்புதானே”

   

“ஓ இது வேறயா”

   

“ஆமாம் அதனால நான் சொல்றதை மறந்துடாத முடிஞ்சவரைக்கும் போராடி ஜெயிக்க பாரு. வந்தனாவுக்காக நீ விட்டுக்கொடுத்து போயிடாத.”

   

“சரிங்கத்தான் நான் பார்த்துக்கிறேன்” என பயத்துடன் சொல்லவும் அவள் கன்னத்தில் மாறி மாறி முத்தம் தந்துவிட்டு

   

”இப்ப தான் திருப்தியாயிருக்கு ஒரு நாள் உனக்கு முத்தம் கொடுக்கலைன்னாலும் அந்த நாளே எனக்கு வேஸ்ட்டா தெரியுது. சரி காலையில காபியும்  நைட் நட்ஸ் பாலும் கொடுக்கறப்ப என்ன செய்றன்னா நீ இந்த வீட்ல பூஜையறைக்கு ஒட்டினாப்பல ஒரு ரூம் இருக்கும் சின்னதுதான் ஸ்டெடி ரூம்னு சொல்வாங்க அங்க வந்துடு”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.