(Reading time: 25 - 50 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

பக்கத்தில் ரிஷி இருக்கவும் பயந்தவள் பேயறைந்ததை போல மாறினாள்

   

”அத்தான் நீங்களா” என பயந்து பயந்து பேச

   

”அத்தானேதான் எவ்ளோ நேரம் உன்னை எழுப்பறது”

   

“நீங்க எப்படி இங்க”

   

”ஷ் அமைதியா பேசுடி மத்தவங்க எழப்போறாங்க”

   

“சரி எதுக்காக இங்க வந்தீங்க”

   

“உன் அண்ணன் தொல்லை தாங்க முடியலை என்னால உன்கிட்ட வர முடியலை அதான் இப்ப வந்தேன்”

   

“அய்யோ அத்தான். இது தப்பு நீங்க இங்க இருக்கற விசயம் தெரிஞ்சா என்னாகும் தெரியுமா வம்பாயிடும்”

   

“நான் போயிடறேன் இப்ப நான் எதுக்கு வந்தேன்னு சொல்லிடறேன்”

   

“என்ன அத்தான் என்னாச்சி”

   

“பிரச்சனைதான் தாத்தா இன்னிக்கு ஏதோ பெரிய போட்டி வைச்சிருக்காரு. அது ரொம்ப கஷ்டம்னு சித்தி கூட சொன்னாங்க. ஏற்கனவே நீ ஒரு வாய்ப்பை இழந்துட்ட இந்த போட்டியிலயும் உன்னால ஜெயிக்க முடியலைன்னா வாய்ப்பு கேட்டு தொலைக்காத இருக்கற 2 வாய்ப்பையும் பத்திரமா வைச்சிக்க நான் சொல்றேன் உன்னால எப்ப முடியாதுன்னு எனக்கு தோணுதோ அப்ப நானே சொல்றேன் அப்ப நீ அந்த 2 வாய்ப்பையும் பயன்படுத்தி அதுவரைக்கும் கொஞ்சம் கஷ்டப்பட்டு போராடி ஜெயிக்க பாரு சரியா”

   

“சரிங்கத்தான். ஆனா இன்னிக்கு என்ன போட்டின்னு தெரியுமா”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.