(Reading time: 25 - 50 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

”அத்தான்” என்றாள் நந்தினி ஆசையாக திரும்பி அவனையும் அணைத்துக்கொண்டு அவனது நெஞ்சில் தலை வைத்து  தூங்கவே ஆரம்பித்தாள்.

   

ரிஷிக்கு தான் சொல்ல வந்த செய்தியை சொல்லிவிட்டு செல்ல எண்ணியவன் நந்தினியின் இந்த செய்கையால் மிகவும் கவரப்பட்டு அவளை இன்னும் தன்னுடன் இறுக அணைத்துக்கொண்டு கண்கள் மூடிக்கொண்டான். 

   

சரியாக 6 மணிக்கு அலாரம் அடிக்கவும் ரிஷி சட்டென கண்கள் திறந்து சிறிது தலையை தூக்கி பார்த்தான். 

   

வந்தனா எழுந்து அலாரத்தை ஆப் செய்தாள்.

   

”அடிப்பாவி 6 மணிக்கு எழறதுக்கு அலாரம் ஒரு கேடா உனக்கு இந்த சத்தத்தில வந்தனா எழுந்திட்டா இன்னும் நந்தினி ஏன் எழலை” என தன் பக்கத்தில் இருந்தவளை உலுக்கினான் ரிஷி.

   

வந்தனாவோ பெட்டை விட்டு எழுந்தவள் நேராக நந்தினியிருந்த இடத்திற்கு வந்து அவளை எழுப்பினாள்

   

”நந்தினி எழு ஏய் எழு” என கத்தவும் நந்தினி இன்னும் ரிஷியை நன்றாக அணைத்துக்கொண்டு முனகினாள்

   

”ம் இரு எழுறேன்”

   

“எழுந்து வா” என கத்திவிட்டு அவள் குளிக்க பாத்ரூமுக்கு செல்ல ரிஷிக்கு நிம்மதியானது.

   

”ஒரு விக்கெட் போயாச்சி மிச்சம் இன்னும் தூங்குதுங்க இனி அவங்க எழ நேரமாகும் நம்மாளை எழுப்பிட வேண்டியதுதான்

   

”நந்தினி நந்தினி” என அவளை உலுக்கி எழுப்பி அமர வைத்தான் ரிஷி. தூக்க கலக்கத்தில் தன் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.