(Reading time: 25 - 50 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

“இனி பாரு அது ஒண்ணும் பெரிய விசயமில்லை. கேஸ் போலதான் என்ன கொஞ்சம் புகை வரும் கண்ணு எரியும் அவ்ளோதான் வேலைக்காரங்க கிட்ட சொல்லியிருக்கேன் போய் பாருங்க” என சொல்ல நந்தினி தாத்தாவிட்ம்

   

”நிஜமாவே சிலிண்டர் தீர்ந்து போச்சா இல்லை விறகடுப்பில சமைக்கறதுதான் போட்டியா தாத்தா”

   

“நீ எப்படி வேணும்னாலும் நினைச்சிக்கம்மா அதைப்பத்தி எனக்கு கவலையில்லை. 10 மணிக்குள்ள டிபன் ரெடியாகனும் அப்புறம் காபி போட்டு கொண்டாங்க எல்லாரும் இப்ப எழுந்திடுவாங்க போங்க” என சொல்ல அந்த 4 பெண்களும் தோட்டத்திற்கு வந்து பார்த்தனர்.

   

இதில் வந்தனா, நந்தினிக்கு பிரச்சனையில்லை. இருவருக்கும் விறகடுப்பில் வேலை செய்து தெரியும். ஆனால் சோனாவுக்கு புதிது. மிருதுளாவிற்கு தெரிந்திருந்தாலும் அவள் புகைமூட்டத்திலும் கண் எரிச்சலிலும் சமையல் செய்ய பயந்தவள் சட்டென சோனாவிடம்

   

”சோனா ஒரு ஐடியா என்னாலயும் உன்னாலயும் எப்படியும் இங்க விறகடுப்பில சமைக்க முடியாது. பேசாம நான் ஓவன்ல சமைக்கலாம்னு இருக்கேன் நீ என்ன செய்ற”

   

“எனக்கு கேஸூம் வேணாம் ஓவனும் வேணாம்”

   

“ஏன் அப்ப நீ இந்த போட்டியை விட்டு விலக போறியா”

   

“இல்லை நான் செய்யப்போற டிஷ்க்கு தேவைப்படாது” என சொல்லிவிட்டு வீட்டிற்குள் செல்லவும் பின்னாடியே மிருதுளாவும் ஓவனில் சமைக்க சென்றுவிட்டாள். வந்தனா அதற்குள் அடுப்பை மூட்டிக்கொண்டிருக்க நந்தினி யோசித்தாள் அங்கு 2 விறகடுப்புகளே இருந்ததால் அதில் ஒன்றில் சென்றவள் அடுப்பை பற்ற வைத்துக்கொண்டாள். 

   

விறகடுப்பில் புகை அதிகமாக வரும் என்பதால் மூடி போட்டு செய்யும் சமையலை செய்ய நினைத்தவள் சட்டென இட்லியை சமைக்கலாம் என நினைத்து அதற்கு தேவையானதை செய்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.