(Reading time: 25 - 50 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

   

“சாரி தாத்தா நான் டைம் பிக்ஸ் பண்ணப்ப தப்பா அமுக்கிட்டேன்”

   

”கவனமா இனிமே சமையல் செய்யனும் சின்ன தப்பா இருந்தாலும் சரி அதனால முழு சமையலும் வீணாகும் புரியுதா”

   

“புரியுது தாத்தா” என சொல்ல அவரும் அடுத்து நந்தினியை அழைத்தார்.

   

அவள் செய்த பிசிபேளாபாத் காய்கறிகளின் கலவை சாதம் அற்புதமாக இருக்கவே

   

”ரொம்ப நல்லாயிருக்கும்மா இன்னிக்கு உனக்கும் புல் மார்க் தரேன்” என சொல்லிவிட்டு சாப்பிட ஆரம்பிக்கவும் அவளுக்கு சந்தோஷமாக இருந்தது.

   

வந்தனாவிற்கோ சோனாவைவிட நந்தினி மீதே சந்தேகம், வெறுப்பு, கோபம் என அனைத்தும் உருவானது. நந்தினிக்கும் வந்தனாவின் குணம் தெரிந்திருந்ததாலும் அவளிடம் இருந்து ஒதுங்கி செல்ல நினைத்தாள்.

   

மதியம் சாப்பிட்டு முடித்த கையோடு ஹாலில் இருந்த சோபாவில் நந்தினி சுசித்ராவுடன் அமர்ந்துக்கொண்டு அர்ஜூன் கொண்டு வந்த சமையல் புத்தங்களை வைத்துக்கொண்டு ஆராய்ச்சி செய்துக்கொண்டிருந்தாள். நந்தினிக்காக சுசித்ராவும் தனக்கு தெரிந்த சில டிப்ஸ்களை சொல்லிக்கொண்டிருக்க அதை அர்ஜூன் ரிஷி தாத்தா 3 பேருமே அவர்களை தொந்தரவு செய்யாமல் பார்த்து அவர்கள் பேசிக்கொள்வதை கவனமாக கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

   

நேரம் போனதே தெரியவில்லை நைட் டின்னர் செய்ய வேண்டிய அவசியம் இல்லாத காரணத்தால் மீதி 3 பெண்களும் அதிகமாக ரெஸ்ட் எடுத்துக்கொண்டு நைட் டின்னர் நேரத்திற்கு டைனிங் ஹாலுக்கு வந்து சேர்ந்தார்கள். 

   

தாத்தாவும் பிரபல ஓட்டலிலிருந்து டின்னருக்கு தேவையான உணவுகளை வரவழைத்திருந்தார். அந்த உணவுகளை சாப்பிட்ட நந்தினிக்கு அந்த ருசியை புரிந்துக்கொண்டு 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.