(Reading time: 22 - 44 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

இங்க வந்தேன்”

   

“குளிக்கதானே வந்த சீக்கிரமா போய் குளி உனக்கு முன்னாடி மத்த பொண்ணுங்க ரெடியாகி வந்துடப் போறாங்க”

   

“ஆமா அத்தான் அண்ணா எங்க”

   

“சொந்தக்காரங்க வந்திருக்காங்க இல்லையா அதான் தாத்தா அவனை வைச்சி வேலை வாங்கிட்டு இருக்காரு பாத்ரூம் காலிதான் போ”

   

“நீங்க குளிக்கலையா அத்தான்”

   

“குளிச்சிட்டேன்”

   

”இவ்ளோ சீக்கிரமாவா”

   

“ம் சொந்தங்களை பார்த்தேன் எப்படியும் என்னை தேடுவாங்க அதான் ஜாக்கிங் போறதை கேன்சல் பண்ணிட்டு குளிச்சி ரெடியாயிட்டேன் இப்ப நான் வெளியதான் போறேன் நீ வேணும்னா கதவை சாத்திக்க”

   

“சரிங்கத்தான்” என சொல்லவும் அவனும் எழுந்து வெளியே செல்ல நந்தினி கதவை சாத்த சென்றாள். ஆனால் கதவை கிட்ட சாத்தியவள் தாப்பா போடாமல் விட்டாள் அண்ணன் வந்தால் தப்பாயிடும் என நினைத்தவள் குளிக்க சென்றாள். ரிஷியும் வந்த சொந்தங்கள் முன்பு வரவேற்று உபசரனையாக பேசிவிட்டு தாத்தாவிடம் வந்தான்

   

”எங்கடா ஒரு பொண்ணும் வரலை”

   

“இதுவும் இன்னிக்கான போட்டியா தாத்தா”

   

“ஆமாம் நேத்து வந்தனா கேட்டால்ல ஒரு கேள்வி அதுக்காகதான் நான் அப்பவே போன் பண்ணி இவங்களை வரசொல்லிட்டேன்”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.