(Reading time: 22 - 44 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

தயிர்சாதம் செய்து வைத்தாள். அரிசி வடாம் பொறித்து வைத்தாள்.

   

சோனா நூடுல்ஸ் வைத்து ஏதாவது செய்யலாம் என எண்ணி எதையோ ட்ரை செய்தாள். இதற்காக கூகுளில் சர்ச் செய்தாள். ஒரு புது டிஷ் பற்றி இருக்கவும் அதை செய்ய நினைத்து அவளும் தேவையானதை எடுத்து வைத்தாள். ஏதோ முயன்று செய்து அவள் நினைத்தது வராமல் வேறு ஏதோ வந்து நின்றது. என்ன செய்வது என தெரியாமல் அதோடு அதை எடுத்து வைத்து விட்டாள். தன் சமையலையும் அத்தோடு முடித்தாள்.

   

மதிய விருந்து ஆரம்பமானது. அனைவரும் அமர்ந்தனர்.  டைனிங் டேபிளில் இடம் பற்றாமல் போக அதற்காக தாத்தா வெளியிலிருந்து டேபிள்களை வரவழைத்து புதுச்சேர்களை வைத்தார் சிலர் தரையிலேயே அமர்ந்துக்கொண்டார்கள்.

   

விருந்திற்காகவே பவித்ராவும் சுசித்ராவும் இலைகள் போடுவது தண்ணீர் வைப்பது பழங்கள் வைப்பது இனிப்பு வைப்பது என மற்ற வேலைகளை செய்துக்கொண்டிருக்க தாத்தா வந்தவர்களிடம் சத்தமாக

   

”இங்க பாருங்க என் வீட்டு விருந்தாளிகளா வந்து தங்கியிருந்தாலும் உங்களுக்காக அவங்க சமைச்சிருக்காங்க எப்படியிருந்துச்சின்னு கட்டாயம் சொல்லிட்டு போகனும். காலையில நீங்க எதுவும் சொல்லலைன்னு அவங்களுக்கு ஒரே வருத்தம்” என சொல்ல வந்திருந்தவர்களில் ஒருவர்

   

”என்ன மச்சான் இப்படி பேசறீங்க அதுக்கென்ன விமர்சனம் தானே சொல்லிட்டே போறோம் எங்களுக்கென்னன்னா உங்க வீட்டு விருந்தாளிகளை எப்படி நாங்க குறை சொல்றதுன்னு தான் அமைதியானோம்”

   

“அப்படியெல்லாம் இல்லை நீங்க தாராளமா மனசுல பட்டதை சொல்லுங்க” என சொல்லவும் மற்றவர்களும் அதை ஏற்றுக்கொண்டனர். ஆனால் இதைப்பற்றி அறியாத அந்த 4 பெண்களும் தாங்கள் செய்த சமையலை வேலையாட்கள் உதவியுடன் கொண்டு வந்து வைத்தனர். முதலில் தாத்தா சோனாவை பார்த்தார் அவளது ஒரே ஒரு டபரா மட்டும் இருக்கவே மிகவும் யோசித்துவிட்டு வந்தனாவை பார்த்து முதலில் அவளை அழைத்தார்

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.