(Reading time: 22 - 44 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

”வந்தனா வாம்மா எல்லாருக்கும் பரிமாறு” என சொல்ல அவளும் ஆசையாக அனைவருக்கும் பரிமாறினாள். சரியான அளவுகளில் உணவு தயாரித்திருந்தாள். அவர்களுக்காகவே சமைத்தமாதிரி அது இருந்தது. நேற்று அவர்கள் என்ன சமைத்தார்களோ அதையே அவள் அப்படியே சமைத்து வைக்கவும் அனைவரும் முதலில் அமைதியாக சாப்பிட்டனர். தாத்தாவும் வந்தனாவின் செயலைக்கண்டு கோபமடைந்தாலும் என்ன நடக்கிறது என காணவே அமைதி காத்தார். ஆனால் ரிஷியோ  தாத்தாவிடம்

   

”தாத்தா இந்த வந்தனா ஏன் இப்படி சமைச்சி வைச்சிருக்கா எனக்கு புரியலை தாத்தா காலையிலயும் சரி இப்பவும் சரி நேத்து நம்ம கிராமத்தில சாப்பிட்ட மாதிரியே இருக்கே தாத்தா”

   

“வேணும்னே தான் வந்தனா இப்படி செய்றா”

   

“இதனால அவளுக்கு என்ன கிடைக்கப் போகுது”

   

“தெரியலை அவளை கேட்டாதானே தெரியும் பொறு சாப்பிட்டவங்க முதல்ல விமர்சிக்கட்டும்” என சொல்ல அவனும் அமைதி காத்தான். மற்றவர்கள் சாப்பிட்டு முடித்த உடன் தாத்தா அவர்களை பார்த்து

   

”இப்ப சொல்லுங்க சமையல் எப்படியிருக்கு” என கேட்க வந்தவர்களில் ஒரு பெண்மணி வந்தனாவைப் பார்த்து

   

”இதை நீதான் சமைச்சியா” என கேட்க அவளும் ஆமாம் என உற்சாகமாக தலையாட்டினாள்

   

”நீ மட்டும்தானா இல்லை யாரையாவது கூட்டு சேர்த்தியா”

   

“இல்லைங்க நான்தான் முழுக்க முழுக்க நானே செஞ்சேன்” என பெருமையாக சொன்னாள். 

   

அவளுக்கென்னவென்றால் உங்கள் வீட்டு சமையல் கூட எனக்கு வரும் என அவர்கள் முன்பு தன் ஜம்பத்தை காட்ட எண்ணினாள். ஆனால் வந்தவர்களோ 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.