(Reading time: 22 - 44 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

அப்போதுதான் புரிந்தது. அவர்களின் ருசி பாதிக்கு கூட வரவில்லை என சாப்பிட்டுக்கொண்டிருந்தவள் சட்டென பாதியில் எழுந்து அனைவரையும் பார்த்து வேறுவழியில்லாமல்

   

”மன்னச்சிடுங்க” என மன்னிப்பும் கேட்டாள். வந்தவர்களும் அவளது மன்னிப்பை ஏற்றார்கள். மறுபடியும் வந்தனா சாப்பிடாமல் ஒரு ஓரமாக சென்று நின்றுக்கொண்டாள். அவளுக்கு இது பெருத்த அவமானமாக இருந்தது. 

   

அடுத்து மிருதுளா வந்தாள் அவள் ப்ரிட்ஜையே காலி செய்து மட்டன் சிக்கன் பிஷ் என ஏகத்துக்கும் ஐட்டம் செய்திருந்தாள். மொத்தத்தையும் பரிமாற ஆரம்பித்த போதுதான் தான் சாதம் என்ற ஒன்றை செய்ய தவறியதை அறிந்து பயந்துபோய் தன் கையை பிசைய அதைப்பார்த்த நந்தினி அவளிடம் வந்தாள்

   

”என்னாச்சி” என அக்கறையாக கேட்க

   

“சாதம் செய்ய மறந்துட்டேன் நந்தினி எல்லாருக்கும் வேற பரிமாற ஆரம்பிச்சிட்டேன் இப்ப என்ன பண்றதுன்னு தெரியல”

   

“ஒண்ணும் பிரச்சனை இல்லை நீ இப்படி மறந்துட்டது தெரிஞ்சிதான் நான் ரெண்டு மடங்கா சாதம் வைச்சேன் யாருக்கும் தெரியாம என்னோட சாதத்தை கொண்டு போய் பரிமாறிடு போ” என சொல்ல அவளும் அதே போல் செய்தாள். அவளது நான்வெஜ் சமையல் அசத்தலாக இருந்ததால் அனைவரும் அதை விரும்பி சாப்பிட்டனர்.

   

அடுத்து சோனாவை பார்த்த தாத்தா 

   

”என்னம்மா நீ என்ன செஞ்சிருக்க” என கேட்க அவள் தாத்தாவிற்கு ஒரு கப்பில் அவள் செய்த நூடுல்ஸ் டிஷ்ஷை கொண்டு வந்து கொடுக்க அவர் அதை சாப்பிட்டு விட்டு

   

”இதுவும் வித்தியாசமாதான் இருக்கு இது என்னம்மா”

   

“அது தாத்தா நான் நூடுல்ஸ் வைச்சி ஒரு டிஷ் ட்ரை பண்ணேன் ஆனா பாருங்க அது திக்கா  

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.