(Reading time: 22 - 44 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

புரிய திருதிருவென விழித்தாள்

   

”நான்வெஜ் சமைக்கற ஆசையால அதுக்கு முக்கிய தேவையான சாதத்தை செய்ய மறந்துட்ட கடைசியில நந்தினி செய்த சாதத்தை பரிமாறியிருக்க” என சொல்ல மிருதுளா நந்தினியை பார்த்து முறைக்கவும் தாத்தா உடனே

   

”இதப்பாரு மிருதுளா அவளை ஏன் முறைக்கற நான்தான் முதல்லயே பார்த்துட்டேனே நீ செய்யலைன்னு தெரிஞ்சிதான் நானே அவள்ட்ட சொல்லி ரெண்டு மடங்கா சமைக்க வைச்சேன் எல்லாத்திலயும் கவனமா இருக்கனும் சின்ன சின்ன விசயத்தையும் மறந்துட கூடாது வெறும் குழம்பும் கறியும் இருந்து சாதம் இல்லாம போனா எப்படி சாப்பிட்டிருப்பாங்க. சொல்லு இன்னிக்கு வந்தனாவை திட்டின மாதிரிதானே உன்னையும் திட்டியிருப்பாங்க”

   

“சாரி தாத்தா எனக்கு டைம் கிடைக்கலை”

   

“டைம் நிறைய இருக்கு மிருதுளா உனக்கு கவனம்தான் பத்தலை. இனிமே அப்படியிருக்காத எது முதல்ல முக்கியமோ அதை செய் அப்புறம் உனக்கு பிடிச்சதை செய்” என சொல்லவும் அவளும் சரியென தலையாட்டினாள்

   

அடுத்து நந்தினியை பார்த்த தாத்தா

   

”இன்னிக்கு உன்னோட மார்க் பார்த்தியா” என கேட்க அவளும்

   

”பார்த்தேன் தாத்தா” என சொல்ல

   

”நீதான் இன்னிக்கு பர்ஸ்ட் வந்திருக்க நிறைய மதிப்பெண்கள் எடுத்திருக்க. இப்படியே நீ தினமும் நல்ல மதிப்பெண்கள் எடுக்கனும் சரியா”

   

“சரிங்க தாத்தா” என சொல்ல

   

”சரிங்கம்மா கிளம்புங்க போய் தூங்குங்க” என சொல்ல அனைவரும் எழுந்துக்கொள்ள வழக்கம் போல நந்தினி பால் காய்ச்சி கொண்டு வந்து கொடுத்தாள். தாத்தா அந்நேரம் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.