(Reading time: 22 - 44 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

”அம்மாடி பார்த்து செய்ம்மா அவங்களுக்கு உன் மேல் நாட்டு பாணி பிடிக்காது.”

   

“சரிங்க தாத்தா நான் வேற ஏதாவது செய்றேன்” என சொல்லியவளுக்கு ஒன்றுமே புரியவில்லை அவள் யோசிக்க ஆரம்பித்தாள்.

   

மிருதுளாவோ அவர்கள் நான்வெஜ் கூட சாப்பிடுவதாக சொன்ன காரணத்தால் தான் வாங்கி வந்த அனைத்து அசைவத்தையும் வைத்து சமைத்து காலி செய்ய திட்டமிட்டவள் அதற்காக காலையில் ப்ரிட்ஜில் இருந்த மொத்த சிக்கனையும் எடுத்து குழம்பு வைத்தாள். அதை செய்யவே அவளுக்கு நேரம் சரியாக இருந்த காரணத்தால் பேருக்கு சிறிது இட்லி வைத்தாள்.

   

அடுத்து வந்தனா நேற்று அவர்கள் செய்த சமையலையும் அதற்கான செய்முறையையும் அவர்களிடம் தெரிந்து வைத்திருந்தபடியால் அவர்கள் செய்த டிபனையே செய்ய ஆரம்பித்தாள்.

   

தாத்தாவோ நந்தினியை தேடிப்பார்த்து கடைசியில் அர்ஜூனை பிடித்தார்

   

”அர்ஜூன்” என அழைக்க 

   

“என்ன தாத்தா” என்றான் 

   

”எங்கடா உன் தங்கச்சி”

   

“இங்கதான் இருப்பா” என சுற்றி முற்றி பார்த்துக் கொண்டே சொன்னான்.

   

“அவளை நான் காலையிலிருந்து பார்க்கலைடா”

   

“அப்படியா ஆமா அண்ணா எங்க”

   

”அவன் ரூமுக்கு போயிருக்கான்”

   

“அப்ப தங்கச்சியும் அங்கதான் இருக்கும் நான் போய் கூட்டிட்டு வரேன்” என சொல்லிவிட்டு 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.