(Reading time: 31 - 62 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

தொடர்கதை - தூறல் போல காதல் தீண்ட - 19 - சசிரேகா

   

போட்டியின் 9வது நாள்

   

காலையில் வீட்டில் ஒரே பரபரப்பாக இருந்தது. கருணா அவசரமாக வீட்டிற்குள் அங்குமிங்கும் அலைந்துக் கொண்டிருந்தான். இன்று மீட்டிங் இருக்கிறது அதற்கு தேவையான ஆவணங்களை தயார் செய்துக்கொண்டிருந்தான். ரிஷியும் தன் தந்தையுடன் அந்த மீட்டிங்கை பற்றி பேசிக்கொண்டிருந்தான்.

   

”அப்பா இது ரொம்ப முக்கியமானது இதை மிஸ் பண்ண வேணாம் நீங்களும் வாங்க ஒண்ணாவே போலாம்”

   

“என்னடா எப்பவும் நீ என்னை கூப்பிட மாட்ட இன்னிக்கு என்னாச்சி”

   

“தெரியலைப்பா இப்ப இப்ப கொஞ்ச நாளா என் மைன்டு சரியாயில்லை. ஒரு மாதிரியா இருக்கு வேற ஏதேதோ கவனம் வருது. அதனால நான் மீட்டிங்ல சொதப்பிடக்கூடாதுன்னு பார்க்கறேன்பா அதான் கூப்பிடறேன்”

   

“புரியுதுடா விட்ல 4 பொண்ணுங்க இருக்காங்க நீயும் அவங்களை பார்க்கற மனசு அலைபாயத்தான் செய்யும் ஆனா ஒரு விசயத்தை மறந்துடாத ரிஷி அந்த 4 பொண்ணுங்கள்ல ஒருத்திதான் உனக்கு வருவாள். அதை புரிஞ்சிக்காம யார் மேலயாவது ஆசை வைச்சி கடைசியில ஏமாந்து போயிடாத” என சொல்ல அவனுக்கு இன்னும் கவலை அதிகமானது. அவனது கவலையை கண்ட தாத்தா அவனிடம் மெதுவாக

   

”என்னடா ஆச்சி மீட்டிங்கை நினைச்சி கவலையா இல்லை உங்கப்பன் சொன்னதை நினைச்சி கவலையா”

   

“உங்களை நினைச்சிதான் நான் கவலைப்படறேன் தாத்தா. என் வாழ்க்கையை பத்தி முடிவெடுக்கற பொறுப்பை ஏன்தான் நீங்க எடுத்துக்கிட்டீங்களோ”

   

“இப்ப யோசிச்சி என்ன பயன் முன்னாடியே இருந்திருக்கனும் சரி விடு என்ன செய்றது எல்லாம் விதி” என சிரித்துக்கொண்டே சொல்லவும்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.