பரபரப்பாக போய் கொண்டிருந்தது. எப்போதும் ரிஷி தனியாக வருவான் இன்று கருணாவும் தினாவும் அவனருகில் அமர்ந்து இருந்தார்கள் கூடவே பின்னாடி 2 பெண்களும் அமர்ந்து இருந்தார்கள். நந்தினிக்கு அருகில் அர்ஜூனும் இருக்கவே அங்கு வந்த தொழிலதிபர்களில் ஒருவர் ரிஷியை பார்த்து
”என்ன ரிஷி ரொம்ப பேமஸ் ஆயிட்ட போல பெரியாள்ப்பா நீ உனக்கு வேலை செய்ய 2 தம்பிங்க இன்னிக்கு பார்த்து 2 பொண்ணுங்களை வேற கூட்டிட்டு வந்து இருக்க இதுல பத்தாததுக்கு வழக்கம் போல அர்ஜூனும் இருக்கான். இப்படி நீ கூட்டமா வர்ற அளவுக்கா இந்த மீட்டிங் அவ்வளவு முக்கியமானதா மாறிடுச்சா உனக்கு”
“முக்கியமோ இல்லையோ மீட்டிங்குக்கு வந்துட்டேன் என் தம்பிகளுக்கு நான் சொல்லித்தரேன் என் பின்னாடி இருக்கற பொண்ணுங்க எனக்கு தெரிஞ்சவங்க கெஸ்ட் அவங்களும் நான் வேலை செய்றதை பார்க்கனும்னு ஆசைப்பட்டாங்க பெண்களை நான் மதிக்கறதால கூட்டிட்டு வந்துட்டேன். இப்ப இவங்க இருக்கறதால இந்த மீட்டிங் ஒண்ணும் கெடாது தாரளமா ஆரம்பிங்க” என சொல்ல அவர்களும் மீட்டிங்கை ஆரம்பித்தார்கள்.
ரிஷியும் மீட்டிங்கை கவனித்துக்கொண்டே தன்னுடைய கருத்துகளை சொல்ல ஆரம்பித்தான். அந்த மீட்டிங்கில் சோனாவின் தந்தை கலந்துக்கொள்ளவில்லை. அவர் வேண்டாம் என விட்டுவிட்டார். அது பற்றி தெரியாமல் சோனா தன் கம்பெனிக்காக பேச ஆரம்பித்தாள். அதைக் கவனித்த ரிஷி அவளிடம்
”என்ன செய்ற நீ இங்க வந்தது என் வேலைக்காக தானே ஆனா நீ உன் கம்பெனி வேலையை செய்றியே”
“நல்ல ஆபர் அதனால ஏன் மிஸ் பண்ணனும்னு நினைச்சிதான் பேசறேன்”
“எல்லாம் சரி இங்க பாரு இந்த மீட்டிங்ல உன் அப்பாவே வரலை அப்புறம் எதுக்காக நீ அவருக்காக பேசனும்”