(Reading time: 31 - 62 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

எந்த விருப்பமும் இல்லை” என சொல்லவும் மோகனசுந்தரத்திற்கு கோபமே வந்தது

   

”நான் உன்னிடம் இதை எதிர்பார்க்கலை உன்னோட திறமை புத்திசாலித்தனம் இதையெல்லாம் வைச்சித்தான் நான் ரிஷிக்காக உன்னைப் பார்த்தேன். என்னோட எண்ணங்களை நீ பொய்யாக்கிட்ட” என சொல்லி வருத்தப்பட்டார். தாத்தா உடனே அவளிடம்

   

”இங்க பாரு நீ என்னோட விதியை மீறிட்ட வெளிய போக கூடாதுன்னு சொல்லியும் நீ உன் கம்பெனிக்கு போயிருக்க அது தப்பு”

   

”சரி தாத்தா நான் கிளம்பறேன் எனக்கும் இங்க இருக்க கஷ்டமாயிருக்கு நான் இங்க வந்ததால என் கம்பெனியிலயும் நிறைய பிரச்சனைகள் வந்திருக்கு நான் அதை சரிசெய்யனும்”

   

“ரிஷியை விட பெரிசா” என தாத்தா கேட்க

   

“ஆமாம் தாத்தா எனக்கு என் கம்பெனிதான் முக்கியம்” என சோனா சொல்லவும் அதற்கு

   

 ”சரிம்மா நீ காலையில உன் வீட்டுக்கு போ இப்ப நைட் ஆயிடுச்சி” என சொல்லவும்  சோனாவும் சரியென ஒப்புக்கொண்டு தன் அறைக்கு சென்று தன்னுடைய லக்கேஜ்களை வேலையாட்கள் உதவியுடன் பேக் செய்தாள். அன்று இரவு அந்த வீட்டிலே சாப்பிட்டு முடித்து உறங்கினாள்

   

போட்டியின் 10வது நாள்

   

விடிந்ததும் சோனா அந்த வீட்டை விட்டு கிளம்ப தயாரானாள். அன்று அவள் செல்லவும் மற்ற பெண்கள் அவள் செல்வதை நினைத்து சந்தோஷப்பட நந்தினி மட்டும் அவளிடம் அன்பாக பேசினாள். 

   

”உன்னோட திறமைக்கு நீ கடைசி வரை இருப்பன்னு நினைச்சேன் சோனா“ என வருத்தப்பட்டாள் நந்தினி

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.