சுயநலம் இருக்கு அதனால தேவையானதை மறந்துட்டு அவசியமில்லாத பொருட்களை எழுதியிருக்க இந்தா உன் லிஸ்ட் நாளைக்கு இதை கொண்டா கோயில்ல நடக்கறத பாரு அப்ப புரியும் எது அவசியம் எது அவசியம் இல்லைன்னு. எதை நீ மறந்து போனேன்னு கூட தெரியும் இந்தா” என நீட்ட அவளும் அவமானத்துடன் அதைப்பெற்றுக்கொண்டாள்.
அடுத்து மிருதுளாவுடைய பேப்பரை பார்த்தார் அதில் அவள் சைவம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. அசைவ சமையலுக்கு தேவையானதை குறிப்பிட்டிருந்தாள். மீதி சாதாரண வீட்டு பூஜைக்கு தேவையானதை எழுதியிருந்தாள். அதைப்பார்த்த தாத்தா அவளிடம்
”உனக்கு மத்த விசயங்களை விட அசைவம்தான் உன் மூளையில நல்லாவே பதிவாயிருக்கு. பொங்கல் வைக்கப்போறோம்னு சொல்லிட்டேன் எப்படி அசைவம் செய்வாங்க அதைப்பத்தி நீ யோசிக்க மாட்டியாம்மா. நாளைக்கு அசைவம் கிடையாது. இந்த லிஸ்ட் சரியில்லை இந்தா இதை நீயே வைச்சிக்க நாளைக்கு வந்து பாரு உனக்கே புரியும்”
“தாத்தா இப்பவே 2 நாளா நான் அசைவம் சாப்பிடலை எனக்காக மட்டும் நான் சாப்பிட்டுக்கிறேனே”
“முடியாதும்மா இது இந்த விட்டோட கலாச்சாரம். இந்த வீட்டு மருமகளா வர போற உன்னால இந்த சின்ன விசயத்தில கூட விட்டுக்கொடுத்து போக முடியாதா” என கேட்க
”சரிங்க தாத்தா” என சோகமாக பதிலளித்தாள்.
அடுத்து நந்தினியின் லிஸ்ட் எடுத்து பார்த்தார்.
ஏற்கனவே அவளுக்கு பொங்கல் வைத்த அனுபவம் நிறைய இருந்ததாலும் பாட்டி உயிரோடு இருந்த காலத்தில் தனக்கு சொன்ன செயல்முறைகளையும் பொருட்களையும் ஞாபகப்படுத்தி எழுதியிருந்தாள். அந்த லிஸ்ட் பார்த்தவருக்கு சரியாக இருந்தது உடனே அதை சுசித்ராவிடம் காட்டினார்
”இங்க பாரும்மா வேற ஏதாவது வேணுமான்னு பாரு” என சொல்ல அவளும் பார்த்தார்.