(Reading time: 31 - 62 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

“பரவாயில்லை ரிஷிதான் வேணும்னு நான் ஒண்ணும் பிடிவாதமா நினைச்சி இங்க வரலை ஒருவேளை நீயும் இங்கிருந்து வெளிய வந்துட்டா நேரா என்னை தேடி வா நான் உனக்கு நல்ல வேலை அதிக சம்பளம் தரேன்”

   

“இல்லை எனக்குதான் அண்ணா இருக்காரே நான் அவர்கிட்ட போறேன்”

   

”சரி எப்படியோ ஆனா இந்த வீட்ல இருக்கறவரைக்கும் உன்கூட எனக்கு எந்த போட்டியும் இல்லை நீ நல்ல பொண்ணு நீயாவது ஜெயிக்கப்பாரு” என சொன்னாள் அவளும் சரியென தலையாட்ட சோனாவிடம் வந்த தாத்தா

   

”இங்க பாரும்மா தனிப்பட்ட முறையில எனக்கு உன்மேல எந்த வித கோபமும் இல்லை. ஏதோ என் விதியை நீ மீறினதாலதான் இப்படி”

   

என அவர் முடிக்கும் முன்பே

   

”இல்லை தாத்தா இப்ப நானேதான் கிளம்பறேன் அதுவும் என் கம்பெனி பிராப்ளத்தை சால்வ் பண்றதுக்காகத்தான் இதுல எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ரிஷியோட கல்யாணத்துக்கு நீங்க கூப்பிடலைன்னாலும் நான் கண்டிப்பா வருவேன்” என சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டாள். 

   

அவள் சென்றதும் தாத்தாவும் போர்டிடம் சென்று அவளுடைய பேரை அழித்துவிட்டார். இனி 3 பெண்கள் தான் அதனால் போட்டியை கடுமையாக்க நினைத்தார். அதன் காரணமாக இன்று முழுவதும் மிருதுளாவே சமையல் செய்தாள். டிபன் சாப்பிட்டு முடித்த கையோடு தாத்தா அந்த 3 பெண்களை ஒன்றாக அழைத்து ஹாலில் இருந்த சோபாவில் அமர வைத்தார்.

   

சோபாவில் அமர்ந்த 3 பெண்களிடமும் தாத்தா பேசலானார்

   

”இன்னிக்கு சோனா போனதால இப்ப மீதி நீங்க 3 பேர் இருக்கீங்க. அதனால போட்டியும் இனி கடினமா இருக்கும் நாளைக்கு குலதெய்வம் கோவிலுக்கு போறதால தேவையான பொருட்களை தயார் செய்ற வேலை உங்களோடது. நீங்க 3 பேருமே கிராமத்தை சேர்ந்தவங்க 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.