சரியாக உள்ளது என சொல்ல அடுத்து அந்த பேப்பரை பவித்ராவிடம் தர அவரும் சரியென்றார்
தாத்தாவும் நந்தினியிடம்
”நிறைய பொங்கல் வைச்ச அனுபவம் இருக்கு போல”
“ஆமாம் தாத்தா என் ஊர்ல 3 மாசத்துக்கு ஒரு முறை பண்டிகை வரும் அப்ப நான்தான் பாட்டி சொல்ல சொல்ல பொங்கல் வைப்பேன். எங்க வீடு பழக்க முறை வேறதான். வசதியில்லைன்னாலும் நாங்களும் ஏதோ செய்வோம்.”
“பரவாயில்லைம்மா இந்த லிஸ்ட் சரியாயிருக்கு. இது போதும் இந்தா. இதை வைச்சிக்க நாளைக்கு எப்படியும் பொங்கல் வைக்க ஏற்பாடுகள் செய்வாங்க. வந்து பாரு இந்த லிஸ்ட் படியிருக்கா இல்ல வேற ஏதாவது புதுசா சேர்த்திருக்காங்களான்னு பாரு. அப்படி ஏதாவது சேர்த்திருந்தா என்கிட்ட வந்து சொல்லு புரியுதா”
“புரியுது தாத்தா” என சொல்லவும் அவரும்
”இன்னிக்கு உனக்கு முழு மார்க் தரேன். நீ சரியான படி லிஸ்ட் ரெடி பண்ணதுக்கு மத்தவங்களை விட உன்னோடது சரியா இருக்கு நந்தினி” என சொல்லவும் அவளுக்கு சந்தோஷம் தாங்க முடியாமல் தாத்தாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றாள். அதைப்பார்த்த வந்தனாவிற்கும் மிருதுளாவிற்கும் கோபம் தலைக்கேறினாலும் அதை வெளிக்காட்டாமல் இருந்தார்கள். மிருதுளாவின் கோபம் டின்னரில் தெரிந்தது. சமையலும் சரியில்லாத காரணத்தால் தாத்தா அவளிடம்
”என்னாச்சி உனக்கு ஏன் இப்படி சமைச்சிருக்க நல்லாதானே சமைப்ப இன்னிக்கு என்ன ஆச்சி” என கேட்க அதற்கு மிருதுளா
”சாரி தாத்தா எனக்கு நான்வெஜ் சமையல் செய்தே பழக்கம் சைவம் செய்ய வரலை”
தாத்தாவும் ஏதோ வெறுப்புடன் சாப்பிட்டுவிட்டு போர்டில் மார்க் எழுதினார். அதில் இன்று