(Reading time: 31 - 62 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

   

“நாளைக்கு நடக்கப்போறதை நினைச்சா எனக்கு பயமாயிருக்கு அத்தான்”

   

”நாளைக்கு என்ன நடந்தாலும் சரி நான் உன்கூட இருக்கறவரைக்கும் நீ தைரியமா இருக்கலாம் நீ வந்தது எனக்காகதான் அந்த 2 பொண்ணுங்களுக்காகவும் இல்லை”

   

“கொஞ்சம் பயமாயிருக்கு அத்தான்”

   

“ஓகே உன்னோட இந்த கொஞ்சம் பயத்தை போக்க என்ன செய்யனும்னு எனக்கு நல்லாவே தெரியும்” என சொல்லிய ரிஷியை சந்தேகத்துடன் பார்த்தாள் நந்தினி

   

”போங்கத்தான் உங்களுக்கு எப்பவுமே விளையாட்டுதான் நானே பயத்துல இருக்கேன் இதுல நீங்க வேற ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு”

   

“அடிப்பாவி இப்படியெல்லாம் அலுத்துக்காத இந்த ரொமான்ஸ் எல்லாம் யாருக்காக செய்றேன் உனக்காகதான் நான் தர்ற பூஸ்ட்டாலதானே நீ இந்தளவுக்கு முதல் இடத்தில இருக்க இல்லைன்னா உன் அண்ணன் கூப்பிட்டதுமே ஓடியிருப்ப இப்பவும் உன் பயத்தை போக்கிட்டா நீயும் தெளிவாயிடுவ. யாரை பார்த்தும் நீ பயப்படமாட்ட” என சொல்லியவன் அவள் அருகில் நெருங்கி அவளுக்கு இன்று நிறைய நிறைய முத்தங்களை கொடுத்து அனுப்பிவைத்தான். அவனது அந்த அன்பில் திக்குமுக்காடி போனவளுக்கு பயம் இருந்த இடமே மறைந்துவிட்டது.

   

விடிந்தது

   

போட்டியின் 11வது நாள்

   

காலையில் 6 மணிக்கே வீட்டில் இருந்தவர்கள் ரெடியாகி கோயிலுக்கு செல்ல ஆயத்தமானார்கள். வந்தனா, மிருதுளா, நந்தினி ஆகிய 3 பேரும் பவித்ரா, சுசித்ராவுடன் சேர்ந்து தேவையான பொருட்களை எடுத்து வைத்தார்கள். ஆண்கள் தங்களுக்கென ஒதுக்கிய வேலைகளை செய்து முடிக்க தாத்தாவும் மற்றவர்களை அழைத்துக்கொண்டு தன் குலதெய்வக்கோயிலுக்கு சென்றார்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.