”எனக்கு அப்படி கேட்கலையே”
“உங்களுக்கு காது கோளாறு என்ன செய்றது ஆமா தாத்தா இந்த 5 பேரும் பொங்கல் வைக்கறாங்களே யாரோட பானையில பொங்கல் முதல்ல பொங்கி வரும்”
“ம் தெரியலை எப்படியும் உன் பாட்டிதான் ஜெயிப்பா”
”ம்ஹூம் இந்த முறை என் ஆளுதான் ஜெயிக்கனும்”
“அதுக்கு என்ன பண்ணப்போற”
“ம் இருங்க வரேன்” என சொல்லிவிட்டு எழுந்து அவ்விடம் சென்றான். ரிஷி என்ன செய்யப்போகிறான் என பார்க்க ஆரம்பித்தார் தாத்தா
பொங்கல் வைக்கும் இடத்திற்கு சென்றவன் பொதுவாக அனைவரிடமும்
”ஓ ரெடியாயிடுச்சா இன்னும் கொஞ்ச நேரத்தில பொங்கல் பொங்கிடும்தானே” என கேட்க அதற்கு பவித்ரா
”ஆமாம்டா பாரு பொங்கல் பொங்கும் பாரு” என சொல்ல பாட்டி உடனே
”என்னோடதுதான் எப்பவும் முதல்ல பொங்கும் இந்த முறையும் நான் தான் ஜெயிப்பேன்” என சொல்ல அதற்கு மிருதுளா
”இல்லை பாட்டி இந்த முறை என் பொங்கல் தான் பொங்கும் பாருங்க” என சொல்லவும்
”நீ ஜெயிச்சாலும் நான் ஜெயிச்சது போலதான்” என சொல்லி பாட்டி மகிழ்ந்தார். ரிஷியும் அந்த பெண்களிடம்
”சரி சரி எப்படியும் பொங்கல் பொங்க போகுதே இன்னும் என்ன எழுந்து நின்று சாமியை