என சொல்லவும் வேறு வழியில்லாமல் அவளும் சரியென்றாள்.
தாத்தாவிற்கு சந்தோஷமாக இருந்தது எப்படியோ இவளும் சில நாட்களில் சென்றுவிடுவாள் அவளின் 3 வாய்ப்புகளும் பறிபோய்விட்டது இனி கஷ்டமான வேலையை கொடுத்து அவளை விரட்ட எண்ணி அதற்கான திட்டம் தீட்டலானார்.
வந்தனா சமைக்காத காரணத்தால் நந்தினியும் மிருதுளாவுமே சமையல் செய்ய ஆரம்பித்தார்கள். ஆனால் இன்றும் அசைவம் வீட்டில் இல்லாதபடியால் மிருதுளா தாத்தாவிடம் வந்தாள்
”தாத்தா எனக்கு கஷ்டமாயிருக்கு தாத்தா நான் நான்வெஜ் சாப்பிடறேனே”
“ஆனா வீட்ல இல்லையேம்மா”
“வாங்கிட்டு வரேன் தாத்தா”
“வெளிய போக கூடாதும்மா”
”தாத்தா” என கத்தினாள் அவளின் சத்தம் கேட்டு வெளியே வந்த பாட்டியும்
”என்னாச்சி மிருதுளா ஏன் கத்தற”
“பாருங்க பாட்டி தாத்தா பண்றது சரியில்லை இத்தனை நாள்தான் அசைவம் சாப்பிடக்கூடாதுன்னு சொன்னாரு இன்னிக்கு நான்வெஜ் சாப்பிடலாம்னா வீட்ல இல்லை நான் போய் வாங்கிட்டு வரேன்னு சொன்னாலும் வெளியே என்னை விடமாட்டேங்கறாரு”
“அதுக்காக அவரை எதிர்த்து இப்படிதான் கத்துவியா”
“வேற என்ன செய்ய சொல்றீங்க பாட்டி என்னால முடியலையே”