“போதும் அசைவம் தான் பெரிசுன்னு நினைச்சி இன்னிக்கு இவள் தன் சுயரூபத்தை காட்டிட்டா. நீயும் அவளுக்கு மறைமுகமா உதவி செய்து என்னோட ரூல்ஸ் எல்லாம் மீறியிருக்க அதனால இப்பவே நான் மிருதுளாவை இந்த போட்டியை விட்டு விலக்கறேன்” என சொல்லவும் மிருதுளா சந்தோஷப்பட்டாள்
”அப்பாடி நான் கிளம்பறேன் இனிமே இந்த ஜெயில்ல என்னால இருக்க முடியாது. ரிஷியை விட எனக்கு என் சந்தோஷம்தான் முக்கியம் நான் கிளம்பறேன்” என சொல்லிவிட்டு அடுத்த நிமிடமே தன் லக்கேஜ்களை பேக்செய்தவள் நேராக பாட்டியிடம் வந்தாள்
”பாட்டி”
“அப்படி கூப்பிடாத என்னையும் அவரையும் நீ திட்டிட்ட இனி என் மூஞ்சியிலயே முழிக்காத”
“நானும் அதைத்தான் சொல்ல வந்தேன் இனிமே எதுக்காகவும் நீங்க என்னை பார்க்க வந்துடாதீங்க என்னை நம்ப வைச்சி ஏமாத்திட்டீங்க நீங்க சரியான ஏமாத்துக்காரி நான் வரேன்” என கத்திவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றுவிட தாத்தா பாட்டியை பார்த்து கோபமாக கத்தினார்
”சீ நீயும் உன் யோசனையும் உன் அப்பா உன்னை என் தலையில கட்டிவைச்சாரு. காலம் முழுக்க நீ ஆடற ஆட்டத்தை நான் பொறுத்துக்கிட்டேன் உன்னோட இந்த திமிரு, பேச்சு எல்லாத்தையம் சகிச்சிக்கிட்டேன். ஆனா ரிஷி பாவம் அவனையும் என்னைப்போல அடிமையாக்க நினைச்சி உன்னைப்போலவே ஒருத்தியை கூட்டிட்டு வந்து நிப்பாட்டினியே இன்னிக்கு பாரு அந்த சின்ன பொண்ணு என்னை பொய்க்காரன்னும் உன்னை ஏமாத்துக்காரின்னும் சொல்லிட்டா போதுமா, சந்தோஷமா, திருப்தியா உனக்கு.
சே இந்த மாதிரி ஒருத்தியை எப்படி உன்னால ரிஷிக்கு தேர்ந்தெடுக்க முடிஞ்சது. உன்னோட கவுரவம் அந்தஸ்துக்காக நான்தான் பலியானேன் என்னோட பேரனையும் பலியாக்க பார்த்தியே நீயெல்லாம் ஒரு மனுசியா இனி என் மூஞ்சியில முழிக்காத” என சொல்லிவிட்டு அவர் தன் அறைக்கு சென்றுவிட முதல் முறையாக அருந்ததி பாட்டி மனம் திருந்தி தான் செய்த