துடித்துக்கொண்டிருந்த வந்தனாவை கவனித்தவர்
”இங்க வாம்மா வந்தனா உன் கையை காட்டு” என கேட்க அவளும் காட்டினாள். கிணற்றில் நீர் இறைத்த காரணத்தால் அவளின் கையில் காயம் ஏற்பட்டிருக்க அதைப்பார்த்த தாத்தா
”என்னம்மா இது எப்படி இப்படியாச்சி”
“அது தாத்தா கிணத்துல தண்ணி இறைச்சி கழுவினேன் அதான்“
”உன்னை யாரு கிணத்துல தண்ணி இறைக்க சொன்னது அதான் இங்க கோயில்ல டேங்க் இருக்கு பைப்பு இருக்குல்ல அதை வைச்சி நீ சுத்தம் பண்ணியிருக்கலாமே. புத்திசாலித்தனமே இல்லை உனக்கு. நந்தினியை பாரு கோயில்ல பாதி இடத்தை அவளே பெருக்கி அவளே கழுவிட்டு இப்ப கோலம் போடவே போயிட்டா உன்னால இந்த கையோட எப்படி கோலம் போட முடியும் எரியும். நீ இதுல கலந்துக்க வேணாம் இப்படி உட்காரு”
“இல்லை தாத்தா நான் கோலம் போடுவேன்”
“இல்லைம்மா பரவாயில்லை அதான் உன்கிட்ட 2 வாய்ப்புகள் இருக்கே அதுல ஒண்ணை விட்டுடு”
“இல்லை தாத்தா என்னால முடியாது” என சொல்ல சொல்ல கேட்காமல் கோலம் போட சென்றாள் பாதி கோலம் போடும் போதே கோலமாவு பட்டு அவளின் கைகள் எரியவும் அவளால் முடியாமல் தோற்று போய் தாத்தாவிடம் வந்து அமர்ந்துக்கொண்டாள். அவரும் அவளிடம்
”சரி விடு ஒரு முறை தவறிடுச்சி ஒரு வாய்ப்பு தானே போனா போகுது முதல்ல சுசித்ராகிட்ட போய் இந்த காயத்துக்கு மஞ்சள் வைக்க சொல்லு போ” என சொல்ல அவளும் சுசித்ராவை தேடி சென்றுவிட்டாள். நந்தினி முதலில் கலர் பவுடரை நிலத்தில் தூவிவிட்டு அதன் மேல் கோலமாவால் கோலமிட்டதால் விரைவாகவே அந்த வேலையை முடித்துவிட்டு தாத்தாவிடம் வந்து நின்றாள்.