அவர் 3 நாள் முன்பே அந்த கோயிலில் ஏற்பாடுகள் செய்ய சொல்லி பணம் கொடுத்துவிட்டு சென்றதால் அங்கிருந்தவர்களும் பாதி ஏற்பாடுகளை முடித்திருந்தனர்.
தாத்தாவின் குடும்பத்தினர் வண்டியில் வந்து இறங்கியதும் அவர்களை வரவேற்றனர்.
ஆனால் தாத்தா அங்கிருந்தவர்களை வேலை செய்ய விடாமல் தடுத்துவிட்டு வந்தனா மிருதுளா நந்தினியை அழைத்தவர்
”இந்த முறை பொங்கல் நாமதான் வைக்கறோம் நீங்களும் இதுல கலந்துக்குங்க சீக்கிரமா உங்களுக்கும் கல்யாண யோகம் கிடைக்கட்டும். அதனால முதல்ல இந்த கோயிலை சுத்தம் பண்ணப்பாருங்க. பெருக்கி துடைச்சி கழுவி கோலம் போடுங்க போங்க பொங்கல் வைக்கறதுக்கு தேவையான அனைத்து வேலைகளையும் செய்ய பவித்ராவும் சுசித்ராவும் போயிருக்கா அதுக்குள்ள நீங்க கோயிலை சுத்தம் பண்ணிடுங்க” என சொல்ல
மிருதுளா நீளமான துடைப்பத்துடன் கோயிலை பெருக்க சென்றுவிட்டாள். வந்தனாவோ அந்த கோயிலில் இருந்த கிணத்தடி நீரை இறைத்து இறைத்து மிருதுளா பெருக்கி விட்டுப்போன இடத்தில் நீர் தெளித்து சுத்தம் செய்தாள். மிகப்பெரிய கோயில் என்பதால் பாதி பாதியாக பிரித்துக்கொண்டனர் அந்த 3 பெண்களும் ஒரு பாதி மிருதுளா பெருக்கவும் அதில் வந்தனா தண்ணிர் ஊற்றி சுத்தம் செய்யவும் மறுபாதி இடத்தை நந்தினி பெருக்கி கழுவும் பொறுப்பை எடுத்துக்கொண்டாள்.
அந்த கோயிலில் ஏற்கனவே டேங்க் கட்டப்பட்டு தனியாக குழாயும் போட்டிருந்ததால் தனக்கான பாதி இடத்தை விரைவாகவே பெருக்கிவிட்டு ஹோஸ் பைப்பை குழாயில் இணைத்து அதன் மூலம் தண்ணீர் வரவழைத்து அந்த இடத்தை கழுவியும் விட்டாள். இதற்கே நேரம் சரியாக இருந்தது. இதில் கோலம் வேற போடவேண்டும் என்ற நினைவு வர அந்த 3 பெண்களும் கோலம் போடும் இடத்திற்கு வந்தார்கள். தாத்தா அந்த இடத்தில் ஏற்கனவே இருந்த காரணத்தால் அவர் அந்த பெண்களிடம்
”சீக்கிரமா கோலம் போடுங்க நேரம் குறைவா இருக்கு” என சொல்லிவிட்டு வலியில்