நந்தினி முதல் இடம் இரண்டாவது வந்தனா மூன்றாவது மிருதுளா என இருந்தது. நந்தினிக்கு மகிழ்ச்சி ரெட்டிப்பாக அவள் உடனே ரிஷிக்காக நட்ஸ் பால் தயாரித்தாள். அவள் செய்வதைப்பார்த்த வந்தனா அவள் மீது கோபப்பட்டாள்
”இப்படியெல்லாம் நீ வசியம் செஞ்சாலும் சரி இந்த போட்டியில உன்னை நான் ஜெயிக்க விடமாட்டேன்” என்றாள் வந்தனா
”நான் எதையும் செய்யலை என் வேலை இதுதானே நான்தான் தினமும் இப்படி பால் காய்ச்சறேன் கொடுக்கறேன். இது எப்படி வசியம் ஆகும். நீ நல்ல பேர் எடுக்கனும்னா நீயும் இந்த மாதிரி செய்ய வேண்டியதுதானே நான் வேணாம்னு சொல்லலையே” என்றாள் நந்தின
“இங்க பாரு தேவையில்லாம பேசாத புரியுதா எந்த வேலை எப்ப செய்யனும் எப்படி செய்யனும் பாராட்டை எப்படி வாங்கனும்னு எனக்கு நல்லாவே தெரியும் உன்னை மாதிரி போட்டி நேரம் முடிஞ்ச பின்னாடி கூட நடிக்க முடியாது. இப்படி நீ செஞ்சாலும் யாரும் உனக்கு மார்க் போட மாட்டாங்க”
“நான் மார்க்குக்காக இதை செய்யலை எனக்கு பிடிச்சிருக்கு அதனால செய்றேன்” என சொல்ல மிருதுளா வந்தாள்
”தாராளமா செய் என்னதான் நீ செய்தாலும் என்னை யாராலயும் வெளிய விரட்ட முடியாது நான் பாட்டியோட வந்தவ அவங்க பேச்சுதான் இங்க எடுபடும்.” என அவள் சொல்ல வந்தனா அவளிடம்
”உன்னோட மார்க் எப்பவும் குறைவாதான் வரும். நீயே கடைசியாதான் இருக்க உன்னால ஜெயிச்சிட முடியுமா”
“கண்டிப்பா முடியும்” என உறுதியாக சொல்லிவிட்டு அவள் சென்றுவிட்டாள். வந்தனாவும் நந்தினியை கேவலமாக முறைத்து விட்டு சென்றுவிட நந்தினிக்கு கஷ்டமாகி போனது. அவள் பாலை அனைவருக்கும் கொடுத்துவிட்டு ரிஷிக்கான பாலை எடுத்துக்கொண்டு ஸ்டெடி ரூம்க்கு சென்றாள்.