தாத்தா பாட்டி கோயில் விசேஷம்னு தெரிஞ்சவங்க அதனால உங்களுக்கு அதைப்பத்தி எல்லாமே தெரியும் ஒரு லிஸ்ட் தயார் பண்ணுங்க
தனித்தனியா 3 பேரும் எழுதுங்க யாரு கூடவும் நீங்க இதைப்பத்தி பேசக்கூடாது. டிஸ்கஸ் செய்யக்கூடாது. மதியம் சாப்பிட்டு முடிச்சதும் இந்த போட்டி நடக்கும் ஆளுக்கு பேப்பர் பேனா கொடுத்துடுவேன் எழுதி கொடுங்க. என்னவெல்லாம் வேணும்னு இப்பவே யோசிச்சி வைச்சிக்குங்க” என சொல்லவும் மிருதுளா சமைக்க சென்றாள்.
குலதெய்வக்கோயில் பொங்கல் என்பது பற்றி அந்த 3 பெண்களுக்கும் தெரிந்திருந்த படியால் அவர்களும் மதியம் சாப்பிட்ட கையோட தாத்தா கொடுத்த பேப்பரில் லிஸ்ட் எழுத ஆரம்பித்தார்கள். தாத்தாவும் அவர்கள் எழுதுவதை கவனமாக பார்த்துக் கொண்டிருந்தார்.
அவர்களும் ஒரு மணி நேரத்தில் எழுதிக் கொடுத்துவிட தாத்தா முதலில் வந்தனாவின் பேப்பரை சரிபார்த்தார். கூடவே பவித்ரா சுசித்ரா இருவரையும் துணைக்கு அழைத்துக்கொண்டார். அவர்களும் அந்த பேப்பரை பார்த்தார்கள். வந்தனாவின் லிஸ்ட் தேவையை விட அதிகமாகவே இருந்தது. சாதாரண குலதெய்வக்கோயில் பொங்கல் வைப்பதற்கு போய் ஏதோ ஊர் கோவில் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்வது போல எழுதியிருந்தாள். அதைப்பார்த்த தாத்தா அவளிடம்
”உங்க வீட்ல பொங்கல் வைக்கறப்ப இப்படிதான் செய்வாங்களா”
“இல்லை தாத்தா எங்க வீட்ல இவ்ளோ செய்யமாட்டாங்க. இந்த வீடு பெரிசில்லையா அதான் நிறைய எழுதிட்டேன். எதையாவது மறந்துடக்கூடாதுன்னு தான் எல்லாத்தையும் எழுதிட்டேன்”
“இது சரியில்லை நான் சொன்னதை நீ செய்யனும் உன் லிஸ்ட்டை படிச்சா ஏதோ கோயில் திருவிழாவுக்கான ஏற்பாடு போல இருக்கு. இதுல சிக்கனம் இல்லை தாராளம் தான் தெரியுது. கோயில்ல பொங்கல் வைக்க இவ்ளோ தேவைப்படாது. எல்லாரும் உன்னை பாராட்டனும்னு நீ நினைச்சி இப்படி செய்றியோ ஆனா அது உனக்கே கெட்டதா முடியுது. நீ எழுதின லிஸ்ட் நான் கொடுத்த வேலைக்கு சரியில்லை இதை நான் ரிஜெக்ட் பண்றேன்
இதுல உன் திறமை புத்திசாலித்தனம் எதுவும் இல்லை நல்ல பேர் எடுக்கனும்னுங்கற