“அவர் வரலைன்னா என்ன அதான் நான் இருக்கேனே என் கம்பெனிக்காக நான் பேசிக்கிறேன்”
“நீ என்ன பேசினாலும் சரி ஜெயிக்க போறது நான்தான் பேசாம அமைதியா இரு”
”முடியாது என் கம்பெனிக்காக நான் பேசுவேன் எனக்கு என் கம்பெனிதான் முக்கியம் அதுக்கு அடுத்துதான் நீங்க” என சொல்ல அதற்கு மேல் ரிஷி எதுவும் பேசாமல் அவளை விட்டு மீட்டிங்கில் கவனம் செலுத்தினான். இம்முறையும் ரிஷியே வெற்றி பெற்றான். அவனது வெற்றியைக்கண்டு கோபமடைந்த சோனாவும் சட்டென அந்த இடத்தை விட்டு வெளியேறி தன் கம்பெனியை காண செல்ல அவளை ரிஷி தடுத்தான்
”எங்க போற நீ தாத்தா திட்டுவாரு”
“நான் அப்பாவை பாரத்து என்ன காரணத்தால இந்த மீட்டிங்குக்கு வரலைன்னு கேட்கப்போறேன்”
“கேட்கனும்னா தாராளமா போன்லயே கேளு இப்ப நீ போகாத”
”இல்லை நான் போவேன்” என சொல்லிவிட்டு அவள் சென்றுவிட ரிஷி நந்தினியை அழைத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான். மதியம் சாப்பாடு முடிந்த கையோடு தாத்தாவிடம் ரிஷி இன்று கம்பெனியில் நடந்தவைகளைப்பற்றி பேச அவருக்கு கோபமே வந்தது. அவர் சோனாவிற்காக காத்திருந்தார்.
அவளும் மாலையில் வரவே தாத்தா அவளிடம் பேசலானார்
”இன்னிக்கு நீ பெரிய தப்பு பண்ணிட்டம்மா” என சொல்ல அவளும் அதிகாரமாக
”தாத்தா ப்ளீஸ் என்னால முடியலை. என் கம்பெனிக்கு நான் தேவை இப்படி நீங்க அடக்கி வைச்சதால என் அப்பாவும் இந்த முறை பெரிய ஆபரை கைவிட பார்த்தாரு நான் அப்பாகிட்ட பேசிட்டுதான் வந்தேன். அவரால முடியலைன்னு விட்டுட்டாராம்”