அசைவம் யாருமே தொடக்கூடாது” என சொல்ல சோனாவிற்கு திக்கென்றது
”மறுபடியும் கிராமமா இந்த முறை சமையல் செய்ய சொன்னா எனக்கு சுத்தமா வராது நான் என்ன செய்வேன்” என இப்போதே யோசிக்கலானாள்
அடுத்து நந்தினியை பார்த்த தாத்தா
”என்னம்மா நீ போறியா இல்லை உன்னோட ஒரு வாய்ப்பையும் இழக்கப்போறியா” என கேட்க ரிஷி உடனே நந்தினியை பார்த்து வா என சைகை காட்டவும் அவள் உடனே
”நான் போறேன் தாத்தா” என சொல்ல தாத்தாவிற்கு பயமே வந்தது
”ரிஷி ரொம்ப நல்லாவே மயக்கி வைச்சிருக்கான். நியாயமா இந்த போட்டியை நடத்தலாம்னா முடியாது போல இருக்கே இவனுக்காகவே நான் கோல்மால் செய்யனுமா சரி பார்க்கலாம்” என தனக்குள் நினைத்துக்கொண்டார்
நந்தினியும் சோனாவும் ரிஷி மற்றும் அர்ஜூனுடன் சாப்பிட்டுவிட்டு கம்பெனிக்கு சென்றுவிட்டார்கள்.
வீட்டில் இருந்த வந்தனாவும் மிருதுளாவும் ஒரு வாய்ப்பை இழந்தபடியால் தாத்தா தண்டனை என்ற பெயரில் இன்று ஒரு நாள் முழுவதும் வந்தனாவும் அடுத்த நாள் முழுவதும் மிருதுளாவும் சமைக்கும் படி கட்டளையிட்டார்.
அதனால் வந்தனா அப்போதே மதியம் சமையல் செய்ய சென்றுவிட்டதால் மிருதுளா தன் அறைக்கு சென்று ஓய்வெடுத்தாள்.
கம்பெனிக்கு சென்ற ரிஷியும் அர்ஜூனும் எங்கு மீட்டிங் நடக்கிறது என தெரிந்து கொண்டு அந்த இடத்திற்கு சென்றடைந்தார்கள்.
மீட்டிங் ஆரம்பமானது.