“நீயே அந்த மீட்டிங்ல பேசியிருந்தாலும் சரி ரிஷி உன்னை ஜெயிக்க வைச்சிருக்க மாட்டான்மா அதை புரிஞ்சிக்க”
“இருந்தாலும் எனக்கு அதை விட மனசில்லை ஒருவேளை அப்பா வந்திருந்தாலும் சரி நான் அவருக்காகதான் பேசியிருப்பேன் தாத்தா”
“அப்ப உன் புருஷனை பத்தி உனக்கு கவலையில்லை நீ ரிஷியோட போனா அவனுக்காகதான் பேசியிருக்கனுமே தவிர உன் அப்பாவுக்காக பேசியிருக்ககூடாது. உன் கம்பெனிக்காக பேசியிருக்கக் கூடாது”
“தாத்தா எனக்கு என் கம்பெனி தான் முக்கியம் அதுக்கு அப்புறம்தான் எல்லாமே” என்றாள். அதைப்பார்த்த மோகனசுந்தரம் சோனாவிடம்
”சோனா உங்கப்பாவுக்கு இந்த மீட்டிங் பத்தி நல்லாவே தெரியும் வேணும்னேதான் அவர் வரலை அப்பவே நீ புரிஞ்சிக்கனும் அவருக்கு இதுல விருப்பம் இல்லைன்னு”
“அதுக்காக என்னால பார்த்துட்டு சும்மாயிருக்க முடியாது அங்கிள்.”
“அப்படின்னா கல்யாணம் ஆனாலும் இந்த குடும்பத்துக்காக நீ எதுவும் செய்ய மாட்டியா”
“நான் யாருக்காகவும் என் கம்பெனியை விட்டுக்கொடுக்க மாட்டேன். சாரி அங்கிள் நீங்க இங்க கூப்பிடவும் இந்த வீட்ல இவ்ளோ ரூல்ஸ் வேலைகள் இருக்காதுன்னு நினைச்சேன் ஆனா பாருங்க தினமும் நான் கஷ்டப்படறேன் இந்த அளவுக்கு நான் என் வீட்ல கூட வேலை செஞ்சதில்லை. ஏதோ ரிஷிக்காக நான் இதை செய்யலை. ரிஷியில்லைன்னாலும் எனக்கு வேற மாப்பிள்ளைகள் கிடைப்பாங்க.
நான் இங்க வந்தது இந்த போட்டியில ஜெயிக்கத்தான் இதை ஒரு விளையாட்டாதான் நான் பார்க்கறேன். இதுக்காக என் கம்பெனியை என்னால விடமுடியாது. கல்யாணம் ஆனாலும் சரி நான் என் கம்பெனியை விட்டுக்கொடுக்க மாட்டேன். ரிஷியோட ஐடியாலஜி வைச்சி என்னோட கம்பெனியையும் நான் பெரிசு பண்ணத்தான் நான் நினைச்சேனே தவிர ரிஷி மேல எனக்கு