”என் விதியை மதியால நான் ஜெயிச்சி காட்டிடுவேன் தாத்தா அந்த 4 பொண்ணுங்க, இந்த போட்டி, நீங்க வைக்கற பரிட்சை, இதையெல்லாம் தாண்டி என் மனசுல நந்தினி மட்டும்தான் இருக்கா அவள் ஜெயிக்கலைன்னாலும் அவளை நான் கல்யாணம் செஞ்சிக்குவேன்”
“அதுக்கு அவள் சம்மதிக்கனுமே”
இப்ப அவளை கேட்டுப்பாருங்க அவள் சரின்னு சொல்வா. அப்படி சொல்றமாதிரி நான் எப்பவோ மாத்திட்டேன் இப்ப அவள் என் உள்ளங்கையில இருக்கா என் பேச்சை தவிர யார் பேச்சையும் ஏன் அர்ஜூன் பேச்சை கூட கேட்க மாட்டா எனக்காக என்ன வேணும்னாலும் செய்வா”
“என்ன வேணும்னாலும் செய்வாளா” என சந்தேகமாக கேட்க
“கண்டிப்பா”
“அப்புறம் என்ன மீட்டிங்குக்கு உன் அப்பனை ஏன் கூட்டிட்டு போற நந்தினியை கூட்டிட்டு போக வேண்டியதுதானே”
“அது முடியாது என் வீட்டு பெண்கள் வேலைக்கு போய் கஷ்டப்படக்கூடாது. நான் ஆம்பளை நான் சம்பாதிக்கறேன் அவளுக்கென்ன நிம்மதியா மகாராணி போல இருக்கட்டும்” என ரிஷி சொல்லி முடிக்கவும் தாத்தா வேண்டுமென்றே அந்த 4 பெண்களையும் வரவழைத்தார்.
அதற்குள் அவர்கள் டிபன் செய்து முடித்தபடியால் அவர்களிடம்
”எல்லாரும் சீக்கிரமா சாப்பிட்டு முடிங்க. ரிஷி ஏதோ மீட்டிங்காக ஆபீசுக்கு போறான். அவன்கூட துணைக்கு நீங்க போகனும்” என சொல்ல வந்தனா தாத்தாவிடம்
”நானா எனக்கு ஆபீசு பத்தி எதுவும் தெரியாதே”