“ரிஷிக்காக நீ போகலாமே அவனோட உழைப்பு வேலைகளை பத்தி தெரிஞ்சிக்கதான் போக சொல்றேன். அவனோட கஷ்ட நஷ்டத்திலயும் உங்க பங்கு இருக்கனும்னு ஆசைப்படறேன் இதுல என்ன தப்பு இருக்கு இதை கூட இன்னிக்கு நான் வைக்கற போட்டியா நினைங்க போதும்” என் சொல்ல வந்தனா அவரிடம்
“இல்லை தாத்தா எனக்கு இந்த கம்பெனி மீட்டிங் பற்றி எதுவும் தெரியாது”
“சரி அப்படி நீ போகலைன்னா உன்னோட ஒரு வாய்ப்பு போயிடும் பரவாயில்லையா” என சொல்ல வந்தனாவும் அதற்கு சரியென்றாள்.
அடுத்து சோனா
”தாத்தா நான் போறேன் எனக்கு கம்பெனி மீட்டிங் எல்லாம் புதுசில்லை நான் போய் பார்க்கறேன்” என சொல்ல அவரும் சரி என்றார்.
அடுத்து மிருதுளா
”தாத்தா நான் போகலை எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துடுங்க. நேத்தே என்னால சரியா சாப்பிட முடியலை எனக்கு நான்வெஜ் வேணும் தாத்தா” என சொல்ல
”இன்னிக்கு வெள்ளிக்கிழமை நீ சாப்பிடவும் கூடாது சமைக்கவும் கூடாது.”
“அப்ப நாளைக்கு”
“நாளைக்கு சனிக்கிழமை நாளைக்கும் அசைவம் கூடாது”
“ஓ தாத்தா அப்ப சன்டே சாப்பிடட்டுமா”
“அன்னிக்கு நான் குலதெய்வ கோயிலுக்கு போய் பொங்கல் வைக்க ஏற்பாடு பண்ணிட்டேன் சன்டே நாம எல்லாரும் கிராமத்துக்கு போறோம் பொங்கல் வைக்கறோம் அதனால அன்னிக்கு