(Reading time: 31 - 62 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

அவளுக்காக காத்திருந்த ரிஷியும் அவளது சோகத்தைக்கண்டு அதிர்ந்து

   

”என்னாச்சிம்மா இன்னிக்கு தாத்தா உன்னை அதிகமா புகழ்ந்தாரு. நீயும் ரொம்ப சந்தோஷமாயிருந்த இப்ப என்னாச்சி இப்படி சோகமாயிருக்க” என கேட்க அதற்கு வந்தனாவும் மிருதுளாவும் தன்னிடம் பேசியதை ரிஷியிடம் சொல்லி வருத்தப்பட்டாள்

   

”இங்க பாரு அவங்களுக்கு இப்ப உன் மேல பொறாமை வந்துடுச்சி. உன்னை எப்படியாவது பேசி கீசி விரட்ட பார்க்கறாங்க அவங்க பேச்சை நீ கேட்காத அது தப்பு”

   

“இல்ல அத்தான் அவங்க பார்வையில இன்னிக்கு நான் வெறுப்பை பார்த்தேன். சோனா இருந்தவரைக்கும் ஏதோ ஒரு சப்போர்ட் எனக்கு இருந்திச்சி ஆனா இன்னிக்கு ரூமுக்கு போகவே பயமாயிருக்கு”

   

“போகாத இதோ பாரு சோபா இருக்கு இங்கயே படுத்துக்க யாரும் உன்னை தப்பா சொல்லமாட்டாங்க”

   

“இல்லை தாத்தா திட்டுவாரு நான் போகனும் அத்தான்”

   

”அப்படின்னா சரி ஆனா அவங்க என்ன பேசினாலும் அதுக்காக நீ பயந்து தொலைக்காத. நீ பயப்பட ஆரம்பிச்சா அவங்க உன்னை இன்னும் பயமுறுத்தி விரட்ட பார்ப்பாங்க சரியா”

   

“ம்”

   

“நான் உனக்குதான் அது எதுக்காகவும் மாறாது நீ எனக்குதான் அதுதான் நிரந்தரமான உண்மை அது தெரியாம அந்த 2 பொண்ணுங்களும் பேசறாங்க அவங்களை விட்டுத்தள்ளு உன் கடமையை நீ செய் பலன் தன்னால கிடைக்கும்”

   

“ம்”

   

இப்படி சோகமா இருக்காத நந்தினி பார்க்க எனக்கு கஷ்டமாயிருக்கு”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.