(Reading time: 31 - 62 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

பார்த்து கண்ணை மூடி வேண்டிக்கிங்க” என சொல்ல அவர்களும் எழுந்து கண்கள் முடிக்கொள்ளவும் ரிஷி சுற்றி முற்றி பார்த்தான் நல்லவேளை வந்தனா அங்கு இல்லை தன் காயத்திற்கு ஐஸ்கட்டி வைக்க அவளும் அர்ஜூனும் கடைக்கு சென்றிருந்தார்கள்.

   

அனைவரும் கண்கள் மூடியிருக்க ரிஷி நந்தினியின் பானையிடம் வந்தான். பாட்டியின் பானை இதோ வந்துவிடும் நிலையில் இருக்கவே ரிஷி உடனே நந்தினியின் பானையை சற்று கிழக்குபக்கம் சாயத்தவாறு சிறிய கல் கொண்டு முட்டுக்கொடுத்தான். அந்த காரணத்தால் நந்தினியின் பொங்கல் உடனே பொங்கவும் ரிஷி கத்தினான்

   

”இதோ பொங்கல் பொங்கிடுச்சி” என கத்தவும் அனைவரும் கண்கள் திறந்து பார்த்தனர்.

   

நந்தினியின் பொங்கல் பொங்கியிருப்பதைக்கண்டு அனைவரும் வியந்தனர். நந்தினி எல்லையில்லா சந்தோஷம் அடைந்தாள்.

   

தாத்தாவிடம் வந்த ரிஷி

   

”எப்படி” என கேட்க

   

”இந்த ஒரு காரணத்துக்காகவே நான் நந்தினியை இந்த போட்டியிலிருந்து விலக்க முடியும் தெரியுமா” என சொல்ல பக்கென்றது ரிஷிக்கு

   

”தாத்தா வேணாம் தாத்தா அப்படி செய்யாதீங்க”

   

“வேணாம் ரிஷி நான் எல்லாருக்கும் ஒரே மாதிரிதான் நடந்துக்குவேன் ஆனா நீ அடிக்கடி நந்தினிக்காக உதவி செய்றது எனக்கு தெரியாதுன்னு நினைக்காத யாராவது நீ செய்றத உடனே என்கிட்ட சொல்லிடறாங்க இப்ப சொல்றேன் இனி ஒரு தடவை நீ நந்தினிக்கு உதவி செய்தாலும் சரி நான் அவளை விரட்டிடுவேன் சொல்லிட்டேன்” என சொல்லிவிட்டு சாமி கும்பிட சென்றுவிட ரிஷியும் சிறிது கலவரத்துடன் பூஜையில் கலந்துக்கொண்டான். 

   

பொங்கல் வைத்து முடிக்கவே மதியம் 3 மணியாகியது. இன்று காலையும் யாரும் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.