(Reading time: 31 - 62 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

”அசைவம் இல்லைன்னா என்ன உன்னால வாழவே முடியாதா”

   

“ஆமாம்” என கத்தவும் பாட்டிக்கு வியப்பாக இருந்தது

   

”என்ன நீ என்னைப் பார்த்து கத்தற”

   

“வேற என்ன செய்யனும் நீங்க என்ன சொல்லி என்னை கூட்டிட்டு வந்தீங்க நான் வெச்சதுதான் இந்த வீட்ல சட்டம் என்னை மீறி யாரும் பேசமாட்டாங்க நீ ஜாலியா இருக்கலாம் ரிஷி உனக்குதான்னு சொல்லி கூப்பிட்டு வந்தீங்க ஆனா இங்க அப்படியா நடக்குது எல்லாம் மாறிடுச்சி நான் என் வீட்ல கூட இவ்ளோ வேலைகளை செய்யமாட்டேன். ஆனா இங்க என்னை ஒரு வேலைக்காரியாவே மாத்திட்டீங்க. எப்ப பாரு சமையல் செய்ற சமையல்காரியாவே மாத்திட்டீங்க. தாத்தாவும் உங்க மேல இருக்கற கோபத்தில நான் செய்றத தப்பு சொல்லி மார்க் குறைச்சி போடறாரு” என கத்த தாத்தா

   

”இல்லைம்மா நான் நேர்மையாதான் மார்க் போடறேன்”

   

”நான் நம்பமாட்டேன் நீங்க பொய் சொல்றீங்க” என கத்தவும் பாட்டிக்கு கோபமே வந்தது

   

”என்னடி நினைச்சிட்டு இருக்க என் வீட்டுக்கு வந்து என் புருஷன் முன்னாடி அவர்கிட்டயே கத்தி பேசறியா”

   

“ஆமாம் நீங்களும் ஒரு பொய்க்காரிதான் பொய் சொல்லி ஆசைகாட்டி என்னை கூட்டிட்டு வந்தீங்க அன்னிக்கு என்ன சொன்னீங்க நான்வெஜ் வேணும்னா வேலைக்காரங்க கிட்ட சொல்லி வாங்கிட்டு வந்து சாப்பிட்டுக்கன்னு சொன்னீங்க அதுக்காக வேலைக்காரனை போட்டும் வைச்சீங்க ஆனா அவன் நான் சொல்றதை கேட்கலை” என அவள் உண்மையை உளறவும் தாத்தா பாட்டியிடம்

   

”ஆக அன்னிக்கு நீ டைனிங் டேபிள்ல மிருதுளாகிட்ட ரகசியமா பேசினது இதுதானா”

   

“இல்லை அது வந்து” என பாட்டி தடுமாறவும் தாத்தா கோபத்தில் பொங்கி எழுந்தார்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.